Jana Nayagan Review: ஜன நாயகன்னு சொல்லி கிச்சடி செஞ்சு வச்சுருக்காங்க.. பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்
சென்னை: முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் ஜூலை 23ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், படம் எப்படி உள்ளது என்பது குறித்து பிரபல விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவரது வீடியோவில், " முதலமைச்சர் விஜய் என்று டைட்டில் கார்டு போட்டதே மொத்த விஜய் ரசிகர்களுக்கும் மனமெல்லாம் நிறைவடைந்துவிட்டது. அதன் பின்னர் படம் எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்பது போல இருந்தார்கள். பகவந்த் கேசரியை வைத்து கிச்சடி செய்து வைத்துள்ளார்கள். பாபி தியோல் வில்லனாக வருகிறார். அவர் எதற்காக வில்லன் ஏன் வில்லன் என்னடா வில்லன் என்பது போல உள்ளது. ஒரு மொக்கை வில்லன்.

அனிருத் & விஜய்: மமிதா பைஜுவோ கிளைமாக்ஸில் ஒரு சண்டை செய்கிறார், அதற்காகவே படம் முழுக்க நடித்தது போல இருந்தது. ஏதோ நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் நடித்துள்ளார். படத்தை மொத்தமாக காப்பாற்றுவது என்றால் அது விஜய் மற்றும் அனிருத் தான். அனிருத் காட்சிக்கு காட்சி தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார்.
படத்தில் எதற்காக ஆப்பிரிக்காவுக்கு சென்று அங்கு படமாக்கினார்கள் என்றே தெரியவில்லை. அதெல்லாம் தேவையில்லாத காட்சிகளாகத்தான் இருந்தது. மேலும் சி.ஜி. காட்சிகள் எல்லாமே ஏதோ வேலை செய்ய வேண்டும் என்பது போல எடுத்து வைத்துள்ளார்கள். படத்தில் ட்ரோன் சும்மா சும்மா பறந்து கொண்டு உள்ளது. அதற்கு ஒரு சவுண்ட் கொடுத்துள்ளார்கள்.
இதெல்லாம் சாத்தியமே இல்லை: இந்தியாவில் சிவில் வார் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார்கள். நாம் வடக்கன்ஸ், மலையாளிகள், கர்நாடகவினர் என எப்படி விமர்சித்துக் கொண்டாலும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளும் அளவுக்கு நாம் இல்லை. ஒருவரை ஒருவர் அன்பு செலுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். அதேபோல் ஆப்பிரிக்கா நாடும் மிகவும் மோசமாக இருப்பது போலவும் காட்சிப்படுத்தி உள்ளனர். ஆனால் உண்மையிலேயே ஆப்பிரிக்க நாடுகள், இந்தியாவைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளாகத்தான் உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு: மொத்தத்தில் படம் ரொம்பவும் சுமாரான ஆவரேஜ் பொழுதுபோக்குப் படம். உங்களுக்கு நேரமும் பணமும் இருந்தால் போய் பார்த்துவிட்டு வாங்க. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் கட்டாயம் பிடிக்கும், முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் மொமண்ட்களாகவே அதிகம் இருக்கும்" என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications

