Nooru Sami Public Review - நூறு சாமி பப்ளிக் விமர்சனம்.. படத்துக்கு மக்கள் கொடுத்த ரிசல்ட் தெரியுமா?
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா,கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. விஜய் ஆண்டனியே படத்தை தயாரித்திருக்கிறார். ரிலீஸுக்கு முன்னதாக படம் பார்த்த செலிபிரிட்டிகள் ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். இந்நிலையில் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்த மக்களும் தங்கள் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி முதல்முதலாக நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து மீண்டும் அந்தக் கூட்டணி இப்போது நூறு சாமி படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. எனவே இப்படத்தின் மீது ஓவர் ஹைப் இருந்தது. முக்கியமாக படம் பார்த்த பிரபலங்கள் எல்லாம் படத்தை ஆஹோ ஓஹோவென்று புகழ; மக்களும் படம் பார்க்க ஆவலோடு இருந்தார்கள். இன்று ரிலீஸான படத்தை பார்த்த அவர்கள் தங்கள் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.

மக்கள் சொன்னது: படம் பார்த்த ரசிகை ஒருவர் பேசுகையில், "படம் சுமார்தான். ரொம்ப டெட் ஸ்லோவாக இருக்கிறது. கமர்ஷியலாகவும் இல்லை. எதிர்பார்த்தபடி இல்லை. கம்மிதான். இன்னும் சொல்லப்போனால் இது ஒரு ஆவணப்படம் போல் இருக்கிறது" என்றார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர், "உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒன்றிரண்டு இடங்களில் அப்படி நடிக்கலாம். எல்லா இடங்களிலும் அப்படி செய்ய முடியாது. பெற்ற தாய்க்கே மறுமணம் செய்து வைப்பது நமது கலாசாரத்துக்கு செட் ஆகாது" என்றார்.
சமூகத்துக்கு தேவையானது: அவர்கள் இரண்டு பேர் நெகட்டிவ்வாக சொல்ல; இன்னொருவரோ உச்சக்கட்ட பாசிட்டிவ்வாக சொன்னார். படம் குறித்து பேசிய அந்த ரசிகர், "எல்லாமே புதிதாக இருக்கிறது. தாயை பற்றிய கதை. சூப்பராக இருக்கிறது. அனைவரும் பார்க்க வேண்டும்.மறுமணம் குறித்து பேசுகிறார்கள். சமூகத்துக்கு தேவையான படம். நான் சொல்வதை விட படம் பாருங்கள். புரியும். அனைவரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். யாரும் எந்த குறையும் வைக்கவில்லை" என்றார்.
ரசிகையின் கருத்து: படம் பார்த்த பெண் ரசிகை கூறுகையில், "பெண்கள் இந்தப் படம் பார்ப்பதைவிடவும்; விதவைக்கு பிள்ளைகளாக இருப்பவர்கள் வந்து பார்க்க வேண்டும். இளம் தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என சொல்வேன். இந்தப் படத்தில் வருவது மாதிரியேதான் என்னுடைய தோழியின் வாழ்க்கையும் இருக்கிறது. எனவே அந்த தோழியின் மகளை அழைத்து வந்து இந்தப் படத்தை காண்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கிராமத்தில் மட்டுமில்லை நகரத்தில்கூட யாரும் முன்னேறவில்லை. படம் பார்க்கும் ஃபீலே இல்லை. நம் வீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்ப்பது மாதிரி இருந்தது" என்றார்.
படம் நன்றாகவே இருக்கிறது: இன்னொரு ரசிகை, 'படம் உண்மையில் நன்றாக இருக்கிறது. சுவாசிகாவின் நடிப்பு சூப்பராக இருக்கிறது. பெண்கள் விருப்பப்பட்டால் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம். இதில் சமூகம் தலையிடக்கூடாது. படத்தில் விஜய் ஆண்டனி உள்பட அனைவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். சுவாசிகாதான் படத்தின் ஹைலைட்" என்றார். பெண்கள் மத்தியில் படம் பெரிய வரவேற்பை பெற்றுவிட்டது என்பது உறுதியாகியிருக்கிறது. எனவே வரும் காலங்களில் குடும்ப ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
