Nooru Sami X Review - விஜய் ஆண்டனியின் நூறு சாமி எக்ஸ் விமர்சனம்.. படத்துக்கு பாராட்டு குவியுது
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. இந்தப் படம் இன்று ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டுக்கு முன்னதாக படம் பார்த்தவர்கள் அனைத்து பிரபலங்களுமே தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்களும் படத்தை எக்ஸ் பக்கத்தில் கொண்டாடிவருகிறார்கள்.
சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். தாய் பாசம் என்ற லைனை வைத்துக்கொண்டு எமோஷனலில் புகுந்து விளையாடியிருந்தார் சசி. படம் அனைவரையும் கலங்க வைத்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சூழல் இப்படி இருக்க மீண்டும் அந்தக் கூட்டணி, 'நூறு சாமி' திரைப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் சுவாசிகா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

இன்று ரிலீஸ்: படமானது இன்று ரிலீஸாகிறது. ஏற்கனவே சசி - விஜய் ஆண்டனி கூட்டணி மீதும், குறிப்பிட்டு சசி மீதும் அதீத எதிர்பார்ப்பு இருப்பதால் படத்துக்கும் ஹைப் எகிறியிருக்கிறது. அதுமட்டுமின்றி படத்தை சிறப்பு திரையிடலில் பார்த்த பிரபலங்கள் எல்லாம் படத்தை ஆஹா ஓஹோவென்று கொண்டாடிவருகிறார்கள். சுதா கொங்கரா, ஹெச்.வினோத் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும்.
நூறு சாமி எக்ஸ் விமர்சனம்: இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி என்ற ரசிகை, 'நூறு சாமி திரைப்படத்துக்கு 5க்கு 4 மதிப்பெண் கொடுப்பேன். பெண்களின் மன உறுதி, துணிச்சல், போராட்டத்தை கொண்டாடும் திரைப்படம். பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய திரைப்படம். மொத்தம் 127 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தில் ஸ்வாசிகா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிஉர்க்கிறார்.
பெண்களுக்கு அதிகாரம்: பெண்கள் அதிகாரமடைந்தல் என்ற படத்தின் கருத்தை அவர் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். விஜய் ஆண்டனி திரையில் வருவது குறைவான நேரம்தான் என்றாலும்; இரண்டாவது பாதியில் ஏழுமலை கேரக்டரில் முத்திரை பதிக்கிறார். படத்தின் உயிர்நாடியே அதன் இசைதான். அவரது இசை படத்தின் உணர்வுகளை அழகாக தாங்கி செல்கிறது. மாயக்கனவு பாடல் நீண்ட நேரம் மனதில் நிலைத்திருக்கும். இந்தப் படம் அமைதியாக உங்கள் இதயத்தில் இடம்பிடித்து இறுதியில் ஒரு புன்னகையுடன் உங்களை வெளியே அனுப்பும். சசிக்கு பாராட்டுக்கள்" என புகழ்ந்திருக்கிறார்.
புதிய சிந்தனை: இன்னொருவர் போட்டிருக்கும் ட்வீட்டில்,'நூறு சாமி திரைப்படத்துக்கு என்னுடைய ரேட்டிங் 3.5/5. இயக்குநர் சசியிடமிருந்து புதிய சிந்தனையை விதைக்கும் திரைப்படம் வந்திருக்கிறது. சுவாசிகா அபாரமாக நடித்திருக்கிறார். தனது உணர்வுப்பூர்வமான இயல்பான நடிப்பால் படத்தை தனியாளாக தாங்கி செல்கிறர். கிராம பின்னணியில் நகரும் இந்தக் கதை, விதவை மஊமணத்தை நுட்பத்துடன் பேசுகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் உருவான இந்தக் கதையை சசி எந்த இடத்திலும் தேவையற்றவைகளை சேர்க்காமல் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
முதிர்ச்சியான நடிப்பு: இடைவேளைக்கு பிறகு வரும் விஜய் ஆண்டனி தனது நட்சத்திர பிம்பத்தை முற்றிலும் ஒதுக்கி வைத்து முதிர்ச்சியான மற்றும் அடக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பாலாஜி ஸ்ரீராம் இசை. குறிப்பாக பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது. க்ளைமேக்ஸ் அருமையாக அமைந்திருக்கிறது. இரண்டு மணி நேரம் 11 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படம் தொடக்கம்முதல் முடிவு வரை ஈர்க்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
