The Odyssey Review: என்னது.. லீலா பேலஸ் தயிர் சாதமா? நோலன் படத்தை பொட்டலம் கட்டிய பிரசாந்த் ரங்கசாமி

சென்னை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் தி ஓடிஸி. படத்தில், மாட் டாமன் ஒடிஸியஸாக நடித்துள்ளார். அதேபோல் டாம் ஹாலண்ட், ஆனி ஹாத்வே, ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சார்லிஸ் தெரான், ஜான் பெர்ந்தல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது விமர்சன வீடியோவில் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தி ஓடிஸி படமானது முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஐமேக்ஸ் ஸ்கீரின்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகவே உள்ளன. இப்படி இருக்கையில் படத்தின் பிரீமியர் ஷோ மற்றும் ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை ஏற்கனவே இணையத்தில் பகிர்ந்து வந்தனர். படத்தின் புரோமோஷனுக்காக இந்தியா வந்த கிறிஸ்டோபர் நோலனோ படம் குறித்த இந்தியாவில் பேச்சுக்கள் அதிகம் அடிபட்டது.

Also Read
The Odyssey: தி ஓடிஸிக்கு சர்வதேச அளவில் சிக்கல்.. அடேங்கப்பா இந்த அளவுக்கு தோண்டி எடுத்து அடிக்கிறாங்க?
The Odyssey: தி ஓடிஸிக்கு சர்வதேச அளவில் சிக்கல்.. அடேங்கப்பா இந்த அளவுக்கு தோண்டி எடுத்து அடிக்கிறாங்க?
The Odyssey Review  Prashanth Rangaswamy Calls Nolan s Epic  Average   Compares It to Costly Curd Rice

இந்நிலையில் படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ஒரு ஷார்ட் விமர்சன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், " தி ஓடிஸி படத்தை கிறிஸ்டோபர் நோலன் போட்டு ஆத்து ஆத்துனு ஆத்தீட்டாரு. இந்த ஊ... ஊ... குரூப் இருப்பாங்க. என்ன செய்யறது லீலா பேலஸில் போய் இரண்டாயிரம் கொடுத்து தயிர் சாதம் சாப்பிட்டா நல்லா இருக்குதுனு சொல்லித்தானே ஆகனும்னு புகழ்ந்துவிட்டு இருப்பாங்கள.. ஐமேக்ஸ் டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டோம் புகழ்ந்து தானே ஆகனும்னு ஊ..ஊ...னு கத்தீட்டு இருந்தாங்க. ஆனால் படத்துல ஒன்னும் இல்லை.

கடைசி 20 நிமிடங்கள்: கிறிஸ்டோபர் நோலனின் இண்டர்ஸ்டெல்லார் படமானது 25 முறை பார்த்தாலும் 25ஆவது முறையும் படத்தில் ஒன்று புரியும். ஆனால் இந்த படம் ஒரு மனிதனின் பயணம் அவ்வளவுதான். டிராய் போர் உலகத்திற்கே தெரியும். அதன் பின்னர் தி ஒடிஸியஸ் தனது நாட்டிற்கு வரும் போது என்னவெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. கடைசி 20 நிமிடங்கள் அம்பை வைத்துக் கொண்டு மேட் டாமன் என்னென்னமோ செய்கிறார், அங்கெல்லாம் விசில் பறக்கிறது. மற்றபடி படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார்கள். முக்கால்வாசி படம் முழுவதும் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

Recommended For You
The Odessy Day 1 Prediction: உலகமே எதிர்பார்த்த தி ஓடிஸி.. நோலனின் கெரியரிலேயே இல்லாத வசூலா அமையுமா?
The Odessy Day 1 Prediction: உலகமே எதிர்பார்த்த தி ஓடிஸி.. நோலனின் கெரியரிலேயே இல்லாத வசூலா அமையுமா?
The Odyssey Review  Prashanth Rangaswamy Calls Nolan s Epic  Average   Compares It to Costly Curd Rice

படம் எப்படி இருக்கு?: சில குரூப் வந்து சொல்லுவார்கள், கிறிஸ்டோபர் நோலனைப் பற்றித் தெரியுமா? ஐமேக்ஸ் கேமரா குறித்து தெரியுமா? என்று ஏதேதோ சொல்லி உருட்டுவார்கள். அதெல்லாம் இல்லை, படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதுதான் விஷயமே? படம் நன்றாக இருக்கிறதா என்றால், பயங்கரமான படமெல்லாம் இல்லையிங்க. சுமாரான படம். உள்ளே பயங்கரமா இருக்கா என்றால், அதெல்லாம் இல்லை. ஒரு சாதாரண கதையில் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். நமது வாழ்க்கையில் எப்படி ஏற்ற இறக்கங்கள் இருக்கிறதோ, அதேபோல் இருக்கிறது. ஒரு ஆவரேஜ் பொழுதுபோக்குப் படம், நிறையா படம் இருந்தால் இந்த படத்தை ஐமேக்ஸ் தியேட்டருக்குச் சென்று பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X