'அக்கு' ஜோடியின் புது குண்டு!

By Staff

Sriji
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று அக்கு பட ஜோடியான ஆழ்வார்ப்பேட்டை அஜய்யும், வடபழனி ஸ்ரீஜி என்கிற ஸ்ரீதேவியும் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் திரைக்கு வந்த வித்தியாசமான படம் அக்கு. இதில் அஜய்யும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்திருந்தனர். படத்தில் படு நெருக்கமாக நடித்திருந்த இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு, தொடர்ந்து ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீஜியின் தம்பி மோகன் குமார் என்பவர் வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது அக்கா ஸ்ரீஜி, நடிகர் அகஸ்டினுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், அவரை படப்பிடிப்புக்கு செல்ல கூடாது என அஜய் துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து இருவரையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் இன்று வருமாறு அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி இருவரும் இன்று மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது போலீஸாரிடம் இருவரும் பரபரப்பான தகவலைத் தெரிவித்தனர்.

அதாவது, தங்களுக்குள் கல்யாணமே ஆகவில்லை என்று இருவரும் கூறினர். ஸ்ரீஜியின் தம்பியால் வந்த குழப்பம்தான் இது என்றும் விளக்கினர்.

'எல்லோருமே நண்பர்கள்தான்':

போலீஸாரிடம் ஸ்ரீஜி கூறுகையில், அஜய் என்னுடன் நடித்த முதல் ஹீரோ என்ற முறையில் பழக்கம். மற்றபடி அவரை நான் திருமணமெல்லாம் செய்து கொள்ளவில்லை. எனக்கு இப்போது கன்னடம் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

எனக்கும் அஜய்க்கும் திருமணம் என்று பரப்பப்பட்ட தகவல்களால் பல வாய்ப்புகள் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு கதாநாயகி ஹீரோவுடன் கிளாமராக நடித்தார் என்பதற்காக அவருடன் இணைத்து பேசுவது தவறு. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

எல்லா ஹீரோக்களும் எனது நண்பர்கள். எனது தம்பி காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி ஒரு புகாரை கூறியுள்ளான். இதனால் எனது வாழ்க்கையே பெரிய கேள்விக்குறியாகி விட்டது என்றார். ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பித்து விட்டார். அவரை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

பின்னர் அஜய் கூறுகையில், படத்தில் நாங்கள் நெருக்கமாக நடித்ததால், வீட்டில் உள்ளவர்களே எங்களுக்குள் காதல் இருப்பதாக தகவல் கிளப்பி விட்டனர். ஒரே படத்தில் நடிப்பதால் நண்பர்களானோம்.

'தங்கினோம் - தப்பு பண்ணவில்லை':

இடையில் அவருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறி என்னுடன் வீட்டில் தங்கினார். ஒரே வீட்டில் தங்கினாலும் தவறு ஏதும் செய்யவில்லை. நண்பர்களாகத் தான் இருந்தோம்.

அக்கு படத்திற்கு பிறகு இதுவரை எங்கள் இருவருக்குமே வேறு படம் இல்லை. இப்படி இருக்க அவரது தம்பி மோகன்குமார் செலவிற்கு பணம் கேட்டார். கொடுக்க மறுத்ததால் எங்கள் பெயரை கெடுக்கும் வகையில் புகார் கொடுத்து விட்டார்.

இப்படி பிரச்சினை ஏற்பட்டதால் நான் அவருடன் இருந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை. இருவரும் சினிமாவில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்றார் அஜய்.

இந்தப் புதிய திருப்பத்தால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், இருவருக்கும் பல்வேறு அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர்.

ரொம்ப சோகமா இருக்கே!

சிக்கலில் 'அக்கு' ஜோடி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X