உமா பதிக்கும், நடிகர் அர்ஜுன் மகளுக்கும் திருமணம் எப்போது? முதல் முறை விளக்கம் கொடுத்த தம்பி ராமையா

சென்னை: நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாவதியும் நடிகர் அர்ஜுனனின் மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து வரும் செய்திகள் இணையத்தில் ஏற்கனவே வெளியானது தான்.

இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் எப்போது என்பது பற்றி முதல் முறையாக தம்பி ராமையா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Actor Umapathi and actor Arjuns daughter get married? Thambi Ramaiah gave explanation

அதோடு ஐஸ்வர்யா தங்களிடம் எப்படி பழகிக் கொண்டிருக்கிறார் என்பது பற்றியும் அந்த பேட்டியில் தம்பி ராமையா பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக பல நட்சத்திர ஜோடிகள் தாங்கள் ஜோடியாக ஏதேனும் படத்தில் இணைந்து நடித்தால் அவர்களுக்கிடையே காதல் ஏற்படுவது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்று. அஜித்-ஷாலினி, சூர்யா -ஜோதிகா போன்று பல நட்சத்திர ஜோடிகள் அதற்கு உதாரணமாய் இருக்கிறார்கள்.ஆனால் எந்தவித படத்திலும் இணைந்து நடிக்காமல், எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொண்டது கூட கிடையாது.இந்த சூழ்நிலையில் உமாபதி-ஐஸ்வர்யா இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவி வந்தது.
கும், நடிகர் அர்ஜுன் மகளுக்கும் திரும

எப்படி இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது என்று பலர் குழப்பத்தோடு இணையத்தில் கேள்விகளை கேட்டு வந்தனர்.ஜீ தொலைக்காட்சியில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வைவல் என்ற ரியாலிட்டி ஷோவை சமீபத்தில் புதிதாக நடத்தி வந்தனர்.

நடிகர் அர்ஜுன் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார்.நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி சர்வைவல் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.தனது தந்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பதால் சர்வைவல் சூட்டிங் பார்ப்பதற்கு ஐஸ்வர்யா அடிக்கடி செட்டுக்கு வருவாராம். அப்பொழுதுதான் உமாபதியின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது.

அப்படி சாதாரண நட்பாக ஆரம்பித்த அவர்களது அறிமுகம் இப்பொழுது காதலில் வந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.சமீபத்தில் தனது சொந்த செலவில் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவிலை கட்டிய நடிகர் அர்ஜுன் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் தம்பி ராமையாவை குடும்பத்தோடு அழைத்து இருந்தாராம்.அந்த நிகழ்ச்சியில் வைத்து இரு குடும்பத்தினரும் இவர்களது காதல் குறித்து பேசி திருமண தேதியையும் குறித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பேட்டி ஒன்றில் உமாபதி பேசியிருக்கிறார். அதில் அர்ஜுன் சார் ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த திரைப்படத்தை நடித்து முடித்ததும் திருமணம் நடக்கும் என்னதான் இருந்தாலும் நான் ஒரு குணசித்திர நடிகர் ஆனால் அர்ஜுன் சார் ஹீரோ. இதை நான் தாழ்வு மனப்பான்மையில் சொல்லவில்லை ஆனால் அவருடைய சௌகரியத்தையும் பார்க்க வேண்டும்.

Actor Umapathi and actor Arjuns daughter get married? Thambi Ramaiah gave explanation

Amala paul: நான் என்னை இழந்திருந்தேன்.. எதுவும் தெரியல, ஏமாத்திட்டாங்க.. புலம்பிய அமலாபால்
அதுமட்டுமல்லாமல் பெண் வீட்டாரின் சம்மதமும் அவர்களுடைய சவுகரியமும் நமக்கு ரொம்பவே முக்கியம். கல்யாணம் என்றால் இரண்டு வீட்டினரின் முடிவுகள் சுகமாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யா எங்களுக்கு இன்னொரு மகள் போல தான் இருக்கிறார். என்னுடைய மகன் உமாபதி ஐஸ்வர்யாவை காதலிப்பதை பற்றி என்னிடம் நேரடியாகவே சொல்லி விட்டான்.

பொதுவாக குழந்தைகள் என்பது நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆனால் நமக்காக உருவாக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்களுடைய சந்தோசம் தான் நமக்கு முக்கியம். அதனால் நாங்களும் அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டோம். அர்ஜுன் சார் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இனி அர்ஜுன் சார் திரைப்படம் முடிவடைந்ததும் திருமணம் நடைபெறும் என்று அந்த பேட்டியில் நடிகர் தம்பி ராமையா பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X