”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற வேண்டும் என்பது தன்னுடைய நோக்கமாக இல்லை என ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பிடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. ஆரம்பத்திலிருந்த பல முக்கிய கட்டங்களில் காப்பாற்றப்பட்டதால் வெற்றியாளர் என்று சொல்லப்பட்டவர். ஆனால் இரண்டாம் இடம் பிடித்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

[ஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...]

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

தமிழக மக்களிடமிருந்து இவ்வளவு அன்பும் ஆதரவும் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது மிக மகிழ்ச்சியாக இருந்தது. வெறுப்புகள் வந்தாலும் அது குறைவுதான். இங்கிருந்து வெளியே போ என்றெல்லாம் தகவல்கள் வந்தன. அதில் ஆச்சர்யம் என்னவென்றால் என்னை விரும்பியவர்கள் எல்லோருமே என்னை வெறுப்பவர்களிடம் சண்டையிட்டதுதான்.

கிண்டல்

கிண்டல்

ஐஸ்வர்யா நாங்க உங்களை மிஸ் பண்ணுகிறோம், நீங்கள் நிச்சயமாக சாதிப்பீர்கள் போன்ற வார்த்தைகள் நெகெட்டிவ்வான விமர்சனங்களை விட மேலானவை. அந்த அன்புதான் மேலும் செலுத்துவதற்கு ஊக்கமூட்டியது. இந்தியில் ஆரம்பித்த காலத்திலுருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். என் வீட்டில் உள்ள எல்லோரும் நீ ஒரு நாள் போட்டியாளராக நுழைவாய் எனக் கிண்டல் செய்வார்கள்.

வெற்றி

வெற்றி

நான் சில படங்களில் நடித்தபிறகு எனக்கு பெரிய வாய்புகள் எதுவும் வரவில்லை. மிகவும் போராடினேன். அப்போதுதான் இந்த நிகழ்ச்சி மூலம் நன்கு பரிட்சயமாவேன் என நினைத்தேன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது வெற்றிபெற வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இல்லை. நாமினேஷனிலிருந்து தப்பித்து என்னை நான் காத்துக்கொண்டு இறுதிவரை இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

 செயல்பட்டனர்

செயல்பட்டனர்

வீட்டிற்குள் இருப்பவர்கள் எனக்கெதிராக செயல்பட ஆரம்பித்தபோது, இன்னும் கடினமாக உழைத்து என் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனெ உணர்ந்தேன். அதுபோன்ற இக்கட்டான நேரங்களில் பிக்பாஸ் என்னைக் காப்பாற்றவில்லை. என்னுடைய ஸ்ட்ரேட்டஜியை பயன்படுத்தி காத்துக்கொண்டேன்.

நண்பர்கள்

நண்பர்கள்

மீண்டும் மீண்டும் நாமினேட் செய்யப்பட்டது பற்றி பேச விரும்பவில்லை என்று சொன்ன ஐஸ்வர்யா, மகத், ஷாரிக், மும்தாஜ் வெளியேறிய பிறகு அடுத்து அவர் அல்லது யாஷிகா என உணர்ந்ததாகவும், பிறகு யாஷிகா இருந்தது நல்லது என உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மகத்தை முன்பே தெரியும் என்றாலும், பிக்பாஸ் வீடு மகத், ஷாரிக், யாஷிகா போன்ற நண்பர்களைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X