மீண்டும் குப்பையை கொட்டிய ஐஸ்வர்யா! அப்போ பாலாஜி… இப்போ ரித்விகா!
ஐஸ்வர்யா மீண்டும் குப்பை கொட்டியுள்ளார்
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரித்விகா மீது குப்பையை கொட்டியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. பார்வையாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களிலிருந்து டைட்டில் வின்னரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க ஆரம்பித்து விட்டனர்.

புதிதாக என்ன டாஸ்க் கொடுப்பது, எது கொடுத்தாலும் மொக்கையகப் போகிறதே என எண்ணிய பிக்பாஸ், இப்போது வெளியேற்றப்பட்ட மற்ற போட்டியாளர்களை உள்ளே விட்டுள்ளார்.
ஷாரிக், பாலாஜி மனைவி நித்யா நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து பழைய நினைவுகளை அசைபோட்டனர். என் புருசன் மேல குப்பையை கொட்டும்போது ஏன் யாருமே தடுக்கவில்லை என நித்யா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பிறகு பைனலிஸ்ட்களின் சொந்தம் பந்தம் என பலரும் வாழ்த்துக்கள் சொன்னதை ஒளிபரப்பினார்கள்.
[சம்பளம் வாங்காமல் நல்ல விஷயத்திற்கு குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்!]
இன்று வெளியாகியுள்ள புரமோவில், ரித்விகா மீது குப்பைக் கொட்டப்படுகிறது. ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக நடித்தபோது பாலாஜி மீது குப்பை கொட்டிய சம்பவங்களை நினைவுகூறும் வகையில் அந்த காட்சி நடித்துக்காட்டப்படுகிறது.
அதில் பாலாஜி இடத்தில் ரித்விகா இருக்கிறார். எல்லோரும் அவர் மீது குப்பையை கொட்டுகின்றனர். அப்போது ஐஸ்வர்யாவும் சேர்ந்து கொட்டுகிறார். அதேபோல் மும்தாஜ் போல் விஜயலட்சுமி நடிக்க, ரித்விகா போல் ஐஸ்வர்யா நடிக்கும் காட்சியும் நடித்து காட்டப்பட்டது. தற்போதுவரை வாக்கு எண்ணிக்கையில் ஐஸ்வர்யாதான் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











