பிக் பாஸ் ஃபினாலேவில் மும்தாஜ், நித்யா இடையே மோதல்: காரணம் ஆர்மி

By Siva

சென்னை: பிக் பாஸ் ஃபினாலேவிலும் இரண்டு பேரை மோதவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார்கள்.

பிக் பாஸ் 2 வீட்டில் சண்டை இல்லாத நாளே இல்லை என்று கூறலாம். நமக்கு காட்டும் 1 மணிநேரத்தில் வரும் சண்டை எல்லாம் டிரெய்லராம். மெயின் பிக்சர் 24 மணிநேரமும் நடக்கிறது என்று பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தவர்களே தெரிவித்துள்ளனர்.

அங்கு நடக்கும் சண்டையை எல்லாம் பார்த்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தோஷம்

சந்தோஷம்

அப்பாடி இன்றுடன் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முடிகிறது என்று போட்டியாளர்களும், பார்வையாளர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நேரத்தில் கூட சண்டையை மூட்டி வேடிக்கை பார்த்துள்ளார் பிக் பாஸ். மும்தாஜும், நித்யாவும் மோதிக் கொள்ளும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரொமோவை பார்த்துவிட்டு அப்படியே நம்பவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யா

மும்தாஜ் ஆர்மி என்னை ரொம்ப கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். என் பர்சனல் மற்றும் கணவருடனான உறவு குறித்து பேச அவர்களுக்கு உரிமை இல்லை என்கிறார் நித்யா. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மக்கள் முன்பு எடுத்து வந்ததால் அவர்கள் பேசுகிறார்கள் என்று மும்தாஜ் பதில் தெரிவித்துள்ளார்.

பாலாஜி

பாலாஜி

தாடி பாலாஜியும், நித்யாவும் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற நிலையில் அவர்களை ஜோடியாக அழைத்து வந்தார் பிக் பாஸ். நிச்சயம் இருவரும் மோதிக் கொள்வார்கள் என்று தெரிந்தும் அவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்கள். நிகழ்ச்சி துவங்கிய புதிதில் கணவன், மனைவி சண்டை தான் பிரதானமாக இருந்தது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் வீட்டில் இல்லை மாறாக தாடி பாலாஜியின் வீட்டில் தான் நடக்கிறது என்று கூறி பார்வையாளர்கள் சிரித்தனர். மோதிக் கொண்டிருந்த கணவன், மனைவியை பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவர்களை பார்த்து ஊரே விமர்சிக்கும்படி ஆகிவிட்டது. இறுதியில் அவர்கள் சேர்ந்துவிட்டாலும் அவர்களின் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்பது தான் உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X