TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
நீலிக் கண்ணீர் வடிக்கிறியோ?: மனைவியுடன் மோதிய பாலாஜி

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களில் அவ்வப்போது மாத்தி மாத்தி பேசுவது தாடி பாலாஜி தான்.
தாடி பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இல்லை. பிக் பாஸ் தான் தாடி பாலாஜி வீட்டில் நடக்கிறது என்று பார்வையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள். அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை காட்டப்படுகிறது.
இன்றும் பாலாஜி, நித்யா சண்டை தான் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
பொறுமை
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் நித்யா கோபப்பட்டாலும் அநியாயத்திற்கு பொறுமையாக இருந்தார் பாலாஜி. நேற்று முன்தினமோ மனைவி மீது கோபப்பட்டு அவரை திட்டினார்.
திட்டு
என்னமா நடக்கிறா, செருப்பை கழட்டி அடிக்கணும் என்று நேற்று முன்தினம் நித்யாவை திட்டினார் பாலாஜி. ஆனால் நேற்றோ மனைவியை தங்கம், ராசாத்தி, நித்திமா என்று கொஞ்சினார்.
|
சண்டை
இன்றைய ப்ரொமோ வீடியோவில் பாலாஜி, நித்யா இடையே மோதல் ஏற்படுவது போன்று காட்டியுள்ளனர். எதுக்கு இந்த ஷோவுக்கு வந்த, நீலிக் கண்ணீர் வடிக்கிறியோ என்கிறார் பாலாஜி.
பார்வையாளர்கள்
புருஷன், பொண்டாட்டி சண்டையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தாலே பத்திக்கிட்டு வருகிறது என்று பார்வையாளர்கள் கடுப்புடன் உள்ளனர். பிக் பாஸ் ரூட்டை மாத்துங்க பாஸு.