பாலாஜி, நித்யா கொஞ்சலோ கொஞ்சல்: ஆனால் தண்ணீர் டாஸ்க் கொடூர மொக்கை
Recommended Video

சென்னை: தாடி பாலாஜிக்கு திடீர் என்று நித்யா மீது பாசம் வந்துவிட்டது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பொறுமையை மிகவும் சோதிப்பதாக தொடர்ந்து விமர்சனம் வந்த வண்ணம் உள்ளது. ப்ரொமோ வீடியோவில் இருக்கும் பரபரப்பு நிகழ்ச்சியில் இல்லை.
நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து பலருக்கு கண்ணை கட்டிவிட்டது.

நித்யா
டாஸ்கின்படி வாட்டர் டேங்கில் இருந்து நீர் வெளியே செல்லாமல் இருக்க முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த நித்யாவுக்கு எலுமிச்சம் பழ ஜூஸ் கொடுத்தார் பாலாஜி.

பாலாஜி
பாலாஜி கிளாஸை பிடித்திருக்க நித்யா ஜூஸ் குடித்தார். எப்படி பண்ணுது பார், அன்னப்பறவை மாதிரி சக்கரையை மட்டும் உறியுது, தண்ணியை விட்டுடுது என்றார் பாலாஜி. பாலாஜி ஊட்டிவிட நித்யாவுக்கு ஒரே சிரிப்பு தான்.

மகிழ்ச்சி
நித்யா ரொம்ப நேரம் வெயிலில் உட்கார்ந்திருந்தாள். அதனால் தான் டக்குன்னு ஜூஸ் போட்டுக் கொடுத்தேன் என்று மும்தாஜிடம் தெரிவித்தார் பாலாஜி. இரண்டு நாட்களாக நித்யா என்னுடன் சிரித்துப் பேசுவதே போதும் சந்தோஷமாக உள்ளது. பசி எடுக்கவில்லை என்று மும்தாஜிடம் கூறினார் பாலாஜி.

சூடு
பாலாஜி காபி கொடுக்க குடுமா என்று செல்லம் கொஞ்சி கேட்டு வாங்கிக் குடித்தார் நித்யா. காபி சூடாக இருந்ததால் ஊதி ஊதி கொடுத்தார் பாலாஜி.

முத்தம்
நேரம் கிடைக்கும் போது எல்லாம் மகத் யாஷிகாவிடம் முத்தம் கேட்கிறார். ஆனந்த் வைத்தியநாதனுக்கு அதிர்ஷ்டம்டா அவரை மும்தாஜ் குளிக்க அழைத்துச் செல்கிறார் என்று கிண்டல் செய்தார் மகத்.

குளியல்
மும்தாஜ் ஆனந்த் வைத்தியநாதன் தலைமுடியை வாஷ் செய்துவிட்டார். என் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது நான் தான் குளிக்க வைத்தேன் என்றார் மும்தாஜ். பிக் பாஸ் உங்களின் தண்ணீர் டாஸ்க் ரொம்ப மொக்கை பாஸ் என்று சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











