“பிரண்ட் அண்ட் பிரண்ட் ஒன்லி”.. பாலாஜிக்கு பார்சலில் நித்யா அனுப்பிய ‘பாம்’

பாலாஜிக்கு நித்யா எழுதிய கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Jaya Chitra

Recommended Video

கண்ணீர் விடும் பாலாஜி...காரணம் அந்த லெட்டர்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலாஜிக்கு அவரது மனைவி நித்யாவும், மகன் போஷிகாவும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் எழுபது நாட்களுக்கும் மேலாக தங்கி இருக்கும் போட்டியாளர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து கடிதம் மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். நீண்ட நாட்களாக குடும்பத்தை பிரிந்து இருக்கும் போட்டியாளர்கள் இந்தக் கடிதங்களைப் பார்த்து உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு போட்டியாளரும் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களைப் படிக்கும் போது, மற்ற போட்டியாளர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் தானாக வழிகிறது. காரணம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் கடிதங்களோடு தங்களையும் மனதார இணைத்துக் கொள்வது தான்.

பரிசுகள்:

பரிசுகள்:

நேற்றைய எபிசோட்டில் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, செண்ட்ராயன் மற்றும் டேனிக்கு கடிதங்களும், பரிசுப் பொருட்களும் வந்தது. இன்று மற்றவர்களுக்கு கடிதங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்வைஸ் மழை:

அட்வைஸ் மழை:

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான புரோமோவில் பாலாஜிக்கு கடிதம் வந்த காட்சிகள் வருகின்றன. இந்தக் கடிதத்தை போஷிகாவும், நித்யாவும் எழுதியது தெரிகிறது. வழக்கம்போல பாலாஜிக்கு நித்யா அறிவுரை மழை பொழிந்துள்ளார்.

அதிர்ச்சி:

அதிர்ச்சி:

கடிதத்தின் இறுதியில் இப்படிக்கு பகுதியில் ‘ப்ரெண்ட் அண்ட் ப்ரெண்ட் ஒன்லி' எனக் குறிப்பிட்டுள்ளார் நித்யா. இதைப் படித்த பாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் நித்யாவிடம் வெறுப்பை உமிழ்ந்த பாலாஜி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக் கொண்டார்.

உண்மை நிலை:

உண்மை நிலை:

எப்படியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், தன் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையில் இருக்கிறார் பாலாஜி. நித்யாவும் அதேபோல் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால், வெளியில் நிலைமையோ வேறாக இருக்கிறது. நித்யா தான் பாலாஜிக்கு வெறும் தோழி மட்டுமே என்பதை இந்தக் கடிதம் மூலம் உறுதி செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X