»   »  பிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா? #BiggBoss2Tamil

பிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா? #BiggBoss2Tamil

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தாடி பாலாஜி நினைத்தது நடக்குமா இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது நடக்குமா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கியது. ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடி நடிகர், கவர்ச்சிக் கன்னி என்று ஒரு கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையான ஆட்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் புகழ் யாஷிகா தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். காவல் நிலையம் வரை சென்ற அவர்களின் பிரச்சனை பற்றி அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

சண்டை

சண்டை

பிக் பாஸ் வீடு என்றால் சண்டை, சச்சரவு இருந்தால் தானே களைகட்டும். அந்த வேலையை நித்யாவும், பாலாஜியும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவி

மனைவி

மனைவி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒன்று நினைக்க தாடி பாலாஜியோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மனைவியுடன் சமரசமாகிவிட வேண்டும் என்று விரும்புகிறார். இதில் யார் நினைத்தது நடக்கப் போகிறதோ?

முதல் நாள்

முதல் நாள்

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது தாடி பாலாஜியும், நித்யாவும் ஒருவரையொருவர் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை மாறாக சிரித்துக் கொண்டனர். பாலாஜி நேற்றே தனது வேலையை துவங்கிவிட்டார்.

வீடு

வீடு

வெளியே வேறு விதமாக உள்ள ஆட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வேறு விதமாக நடப்பார்கள். இதை கடந்த சீசனில் பார்வையாளர்கள் பார்த்துவிட்டனர். இந்த சீசனில் யார் ஹீரோ, வில்லன், வில்லி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bigg Boss 2 Tamil has started on sunday. Actor Balaji is hoping to solve his marital issues with wife Nithya using Bigg Boss opportunity. It is noted that Balaji and Nithya are in Bigg Boss house now.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more