ஏன் பிரசன்னா, உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை?
Recommended Video

சென்னை: நடிகர் பிரசன்னா செய்து வரும் ஒரு காரியத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
புதுப்பொலிவு பெற்றுள்ள சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பனசுந்தரி நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.
அவர் நிகழ்ச்சியை நல்லபடியாகத் தான் தொகுத்து வழங்குகிறார்.
[மகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட அசின்: பெயர் அரின்]

முகம் சுளிப்பு
சொப்பன சுந்தரி நிகழ்ச்சி ஆபாசத்தின் உச்சமாக உள்ளது. அதில் வரும் மாடல் அழகிகள் குட்டி, குட்டியாக உடை அணிவதுடன் உணர்ச்சியை தூண்டும் வகையில் போஸ் கொடுக்கிறார்கள். கேட்டால், இது மாடலிங்கின் ஒரு அங்கம் என்பார்கள். ப்ரொமோ வீடியோக்கள் மிகவும் மோசமாக உள்ளன.

பிரசன்னா
பிரசன்னா என்றால் கொடுத்த கதாபாத்திரத்தில் நச்சென்று நடிப்பார் என்று பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி உங்களுக்கு வேண்டாம் பிரசன்னா, விலகி விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேண்டாம்
சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் பெருமை அடைகிறீர்களா பிரசன்னா என்று கூறி ஒருவர் விளாசியுள்ளார்.

தப்பு இல்லை
டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தவறு இல்லை பிரசன்னா. ஆனால் நல்ல நடிகர், சமூக பிரச்சனைகள் குறித்து துணிந்து பேசும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தான் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. உங்களின் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்களே என்ற வருத்தம் தான் அவர்களுக்கு.


Click it and Unblock the Notifications











