ஐஸ்வர்யாவுக்காக கடைசியில் கமலையே அசிங்கப்படுத்திய பிக் பாஸ்

By Siva

Recommended Video

ஐஸ்வர்யாவுக்காக கமலையே அசிங்கப்படுத்திய பிக் பாஸ்- வீடியோ

சென்னை: ஐஸ்வர்யாவை நல்லவர் போன்று காட்ட கடைசியில் கமலையே அசிங்கப்படுத்திவிட்டார் பிக் பாஸ்.

சக போட்டியாளர்களுக்காக தியாகம் செய்யும் டாஸ்கின்போது ஐஸ்வர்யா சென்றாயனிடம் பொய் சொல்லி அவர் தலைமுடிக்கு சிவப்பு கலர் அடிக்க வைத்தார். தலைமுடிக்கு கலர் செய்தால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று சென்றாயனிடம் ஐஸ்வர்யா கூறினார்.

அவரும் அதை உண்மை என்று நம்பி கலர் செய்தார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

இந்த வாரம் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று ஐஸ்வர்யா சென்றாயனிடம் கூறினார் என ரித்விகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். ஆனால் ரித்விகா கூறியது தான் பொய் புகார் என்பதை நிரூபிப்பது போன்று நேற்று ஒரு குறும்படம் போட்டுக் காட்டினார்கள். அதில் ஐஸ்வர்யா சென்றாயனிடம் அடுத்த வார நாமினேஷன் என்று சொல்வதை திரும்பித் திரும்ப போட்டுக் காட்டினார்கள்.

[Read This: சினேகன் குசும்பன், ஐஸ்-யாஷிகாவை கரெக்ட் பண்ண பார்க்கிறான்]

கமல்

கமல்

என்னை காப்பாற்ற நீங்க மொட்டை அடிக்க வேண்டும் என்று நான் பாலாஜி அண்ணாவிடம் கூறினேன். அவ்வாறு செய்தால் நான் அடுத்த வாரம் காப்பாற்றப்படுவேன் என்றேன். அதற்கு ஐஸ்வர்யாவோ எந்த வாரம் என்று கேட்டார். அது வரை அவர் பொய்யை மெயின்டெய்ன் செய்து கொண்டிருந்தார் என்று ஜனனி கமலிடம் தெரிவித்த வீடியோவை நேற்று மீண்டும் போட்டுக் காட்டினார்கள். குறும்படங்கள் மூலம் ஜனனியும், ரித்விகாவும் தான் பொய்க்கோழிகள் என்று காட்டியுள்ளார் பிக் பாஸ்.

பொய்

பொய்

நேற்றைய குறும்படங்கள் மூலம் ஜனனியும், ரித்விகாவும் தான் பொய் புகார் தெரிவித்தார்கள் என்றும், ஐஸ்வர்யா நல்லவர் என்றும் பிக் பாஸ் சீன் போட்டுள்ளார். அடுத்த வாரம் மேட்டர் ஓகே பிக் பாஸ். சென்றாயன் தலைமுடிக்கு கலர் செய்து கொண்டால் அவர் காப்பாற்றப்படுவார் என்று ஐஸ்வர்யா ரீல் விட்டது தான் முக்கியம். நீங்கள் அந்த பொய்யை மறைக்க அடுத்த வாரம் விஷயத்தை கையில் எடுத்துள்ளது மிகவும் சீப்பாக உள்ளது.

கண்டித்தல்

கண்டித்தல்

ஐஸ்வர்யா சென்றாயனிடம் பொய் சொன்னதற்காகத் தான் கமல் ஹாஸன் அவரை கண்டித்தார். நேற்று நீங்கள் போட்ட குறும்படங்களை பார்த்தால் ரித்விகா, ஜனனியின் பேச்சை கேட்டு எதுவுமே செய்யாத அப்பாவி ஐஸ்வர்யாவை கமல் கண்டித்தது போன்று அல்லவா உள்ளது. கமல் செய்தது சரியே. அவர் கண்டித்ததில் தவறு இல்லை. ஜனனியை ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்க வைத்து ஐஸ் பெரிய உத்தமி என்பது போன்று காட்டிவிட்டனர்.

கேள்வி

கேள்வி

நேற்றைய குறும்படத்தை பார்த்தால் ஸ்க்ரிப்ட்டில் எழுதிக் கொடுக்காமல் இருந்து கமல் தானாக ஐஸ்வர்யாவை கண்டித்திருப்பார் போன்று. அதனால் தான் அவர் செய்தது தவறு என்பது போன்று காட்டியுள்ளார் பிக் பாஸ். நிகழ்ச்சியை நடத்தும் சீனியர் நடிகர், ஒரு கட்சியின் தலைவரான கமலை அசிங்கப்படுத்திவிட்டு அந்த பொய்க்கோழி ஐஸ்வர்யாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் பிக் பாஸின் செயலை என்ன சொல்ல? இது எல்லாம் உங்களுக்கு தேவையா கமல் சார்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X