மகத், யாஷிகா இடையே என்ன உறவு?: பிக் பாஸ் வீட்டிற்கு சென்று கேட்ட ஹரிஷ் கல்யாண்

By Siva

Recommended Video

மஹத் காதலி மிஸ் இந்தியாவா?! கலக்கத்தில் யாஷிகா...வீடியோ

சென்னை: ஹரிஷ் கல்யாண் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் மூலம் யாஷிகாவை அழ வைத்துள்ளார் பிக் பாஸ்.

பிக் பாஸ் முதல் சீசனில் ஒயில்டு கார்டு மூலம் வந்து பலரின் மனதை கொள்ளையடித்தவர் ஹரிஷ் கல்யாண். அவர் ரைசா வில்சனுடன் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று அவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீடியோ

பியார் பிரேமா காதல் ரிலீஸுக்கு முன்பு ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது எடுத்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் மகத், யாஷிகா இடையே இருக்கும் உறவு நட்பையும் தாண்டி புனிதமானது என்று கூறிவிட்டு ஆமாவா, இல்லையா என்று போட்டியாளர்களிடம் கேட்டார். யாஷிகா ஊருக்கு முந்திக் கொண்டு ஆமாம் என்றார், ஆனால் மகத்தோ இல்லை என்று கூறிவிட்டார்.

யாஷிகா

யாஷிகா

பிராச்சி மிஸ்ராவை காதலிக்கும் மகத் பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை பார்த்து முகம் சுளிக்காதவர்களே இல்லை. பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஆர்யா கூட மச்சான் நீ செமயா என்ஜாய் பண்ணுற என்று மகத்தை கலாய்த்தார். அவன் காதலியை மிஸ் பண்ணுவதால் தான் இப்படி எல்லாம் நடக்கிறான் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூட ட்விட்டரில் கலாய்த்திருந்தார். அந்த அளவுக்கு மகத் பிக் பாஸ் வீட்டில் 'வாழ்கிறார்'.

[மகத் ஏன் இப்படி லூட்டி அடிக்கிறார் தெரியுமா?: வெங்கட் பிரபு விளக்கம்]

மும்தாஜ்

மும்தாஜ்

தங்களுக்கு இடையேயான உறவு நட்பையும் தாண்டி புனிதமானது இல்லை என்று மகத் கூறியதை கேட்ட யாஷிகாவின் முகம் சுருங்கி விட்டது. மகத் கூறியதை கேட்டு அப்செட்டாகி அழுத யாஷிகாவை மும்தாஜ் தனது மடியில் படுக்க வைத்து ஆறுதல் கூறியுள்ளார். ப்ரொமோ வீடியோவை வைத்து யாஷிகா அழுததை நம்ப முடியாது. இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மை தெரிய வரும்.

[மகத், யாஷிகா அடிக்கும் லூட்டி: முகம் சுளிக்கும் பார்வையாளர்கள்]

வெறுப்பு

மகத், யாஷிகா அடிக்கும் லூட்டியை பார்த்து கடுப்பாகாதவர்களே இருக்க முடியாது. காதலியை மிஸ் பண்ணுவதாக கேமராவுக்கு முன்பு வந்து கூறிவிட்டு நேராக யாஷிகாவிடம் போய் கடலை போடும் மகத் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்துள்ளார். அவருக்கும், யாஷிகாவுக்கும் இடையே யான உறவு நட்பையும் தாண்டி மட்டமானது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

[ப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X