Neeya naana: காலேஜ் ப்ரொபசருக்கு நடந்த “சாதி” அவமானம்.. புழங்குகிற சாதி? பரபரப்பு ஏற்படுத்திய “மதி”
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த மதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாதி பாகுபாடு குறித்து பேசி இருக்கிறார்.
அதில் பிராமண சமூகத்தில் குப்பை அள்ளுறவங்க இருந்து பாத்திருக்கீங்களா? என்று மதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதுபோல நீயா நானா பிரபலம் மதியின் வாழ்க்கையில் நடந்த பாகுபாடு குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் பலர் வாழ்க்கையில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்தவர்களும் கூட இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எதிர்பார்க்காத வகையில் பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம்.
அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் பிரபலமடைந்தவர்தான் மதி இவர் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வருகிறார். சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் மற்றும் திருமணத்தை வெறுக்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது பெண்கள் தரப்பில் கலந்து கொண்டு இருந்தார். அதில் எதிர் தரப்பில் இருந்த ஒருவரிடம் உங்களை எனக்கு பிடித்திருக்கிறது. நான் நாளைக்கு என்னுடைய அப்பாவோடு வந்து உங்களை மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
அது குறித்து அதிகமான மீம்ஸ்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் மதியின் சமூக வலைத்தள பக்கங்களில் அசிங்கமான வார்த்தைகளால் கமெண்ட் அனுப்பி இருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் youtube சேனல்களில் அந்த ஸ்கிரீன்ஷாட் ஐ வெளியிட்டு பலரைத் திட்டி தீர்த்து இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது தன்னுடைய கல்லூரியில் தான் பேராசிரியராக இருக்கும்போது தன்னோடு வேலை செய்யும் ஒரு பேராசிரியர் இரண்டு பிஹெச்டி படித்தவர் சில உணவுப் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் போது தன்னுடன் வேலை பார்த்த ஒரு பேராசிரியர் அதை சாப்பிடாதே அவர் என்ன ஆளுன்னு தெரியுமா? என்று கேட்கிறார். இந்த மாதிரி ஜாதி பார்த்து பழகுறது மோசம்.
Neeya Naana: கோபிநாத் கேட்ட கேள்வி.. பேச முடியாமல் மூச்சு திணறும் "பிரபலம்".. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
எங்கையாவது குப்பை அள்ளுறவன் பிராமணனா இருந்து பாத்திருக்கீங்களா? குப்பை அல்ல ஆட்கள் தேவை என்று பிராமணர்கள் இருக்கும் தெருவில் ஒரு நோட்டீஸ் ஒட்டி நீங்க பாத்திருக்கீங்களா? அப்போ இந்த சமுதாயத்தில் இந்த ஜாதியினர் இந்த வேலையை பார்க்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்து விட்டார்கள்.
அதனால்தான் பள்ளி படிக்கும் மாணவர்களுக்குள் இடையே கூட ஜாதி வெறி ஊறி கொண்டிருக்கிறது. காலேஜில் பலருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் படித்த மேதாவிகளுக்குள் இருக்கும் ஜாதி வெறி குறையாத போது எப்படி குழந்தைகளுக்குள் ஜாதி வெறி குறையும்? புழங்குகிற ஜாதி, நம்ம ஆளு என்ற பேச்சு வார்த்தை எப்போதும் பலருடைய மனதில் ஆழ்ந்து இருக்கிறது என்று அந்த பேட்டியில் கடும் கோபத்தில் மதி பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











