4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா?

By Siva

Recommended Video

தாடி பாலாஜி - நித்யா ஒன்று சேர்வார்களா?- வீடியோ

சென்னை: ஏற்கனவே மோதிக் கொண்டிருந்த கணவன், மனைவியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் எப்பொழுது மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் அவர்களின் மோதல் துவங்கிவிட்டது.

தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை துவங்கிவிட்டது. பாலாஜி அடக்கி வாசித்தாலும், நித்யா நடந்து கொள்ளும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இது எல்லாம் நடக்கம் என்று தெரிந்து தான் அவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்திருப்பார்களோ?

பாலாஜி

பாலாஜி

கணவன் மனைவி பிரச்சனை பற்றி மும்தாஜ் தாடி பாலாஜியிடம் பேசிய விதம் பாராட்டுக்குரியது. மெதுவாக பேசலாம். யாராவது வந்தால் டாப்பிக்கை மாற்றிவிடலாம். நிறையே பேர் வந்தால் அசிங்கமாகிவிடும் என்று மும்தாஜ் தாடி பாலாஜியிடம் தெரிவித்தார்.

நித்யா

நித்யா

நான் எதையும் மனதில் வைத்துக் கொண்டு கேரட் பொறியலில் வெங்காயம் போடுமாறு நித்யாவிடம் கூறவில்லை. அவராக ஏதாவது நினைத்துக் கொண்டு அடம்பிடித்தால் நான் பொறுப்பு இல்லை என்றார் பாலாஜி.

அறிவுரை

அறிவுரை

நித்யா இன்னும் உங்கள் மனைவி தான் அவருடன் அன்புடன் பேச முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரிடம் தனியாக பேசினால் நன்றாக இருக்கும் என்று மும்தாஜ் கூறிய அறிவுரை அழகு.

கெஞ்சாதே

கெஞ்சாதே

ரொம்ப கெஞ்சினால் மதிக்க மாட்டாங்க. நீங்க உங்க பாட்டுக்கு சிரித்து ஜாலியாக இருந்தால் என்னடா நாம் இல்லாமலேயே சந்தோஷமாக இருக்கிறாரே என்று நினைத்து மனம் மாறலாம். மாத்தி செய்து பார்க்கலாம் என்று மும்தாஜ் பாலாஜியிடம் தெரிவித்து உண்மை தான்.

விவாகரத்து

விவாகரத்து

நித்யா முன்பு காட்டிக் கொள்ளாத பாலாஜி தனியாக வந்து அழுவது போன்று உட்கார்ந்திருந்தார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்க இப்படி ஒரு நிகழ்ச்சியில் கணவன், மனைவி மோதிக் கொள்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.

தீர்வு

தீர்வு

நான்கு சுவற்றுக்குள் தீர்க்க வேண்டிய கணவன், மனைவி பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண டிவி நிகழ்ச்சிகள் எதற்கு என்று கேட்கப்பட்ட நிலையில் பொழுதுபோக்கிற்காக அதை பயன்படுத்துவது சரியா? நீங்க தான் சொல்ல வேண்டும் வாசகர்களே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X