நித்யாவால் ஜூலியை பாராட்டும் பிக் பாஸ் பார்வையாளர்கள்

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்

சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

பிக் பாஸ் வீட்டில் கேரட் பொறியல் செய்தபோது வெங்காயம் போட்டால் நன்றாக இருக்கும் என்று பாலாஜி கூறினார். அவர் கூறிய ஒரே காரணத்திற்காக வெங்காயத்தை சேர்க்காமல் அதை வீணடித்தார் நித்யா.

இது குறித்து நித்யாவிடம் நேற்று கமல் கேட்டார்.

நித்யா

நித்யா

எல்லாம் தெரிந்து தான் கமல் கேட்கிறார் என்பது தெரிந்தும் நித்யா அவரிடம் பொய் சொன்னார். கணவர் பாலாஜி மீதுள்ள கடுப்பில் தான் நித்யா வெங்காயத்தை பயன்படுத்தவில்லை என்று சக போட்டியாளர்கள் கமலிடம் போட்டுக் கொடுத்தனர்.

பொய்

பொய்

தான் பேசுவது உண்மை இல்லை என்று தெரிந்தும் நித்யா கமலிடம் கட்டுக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நித்யாவின் பேச்சால் கமலே கடுப்பாகிவிட்டார்.

கோபம்

கோபம்

நித்யா மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை பார்த்த பார்வையாளர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒட்டு மொத்த பார்வையாளர்களின் கோபத்திற்கும் ஆளாகிவிட்டார் நித்யா.

சமரசம்

சமரசம்

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சமரசம் செய்ய முயன்றாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்கிறார் நித்யா. நித்யா டிவியில் வந்தாலே பார்வையாளர்கள் அவரை திட்டும் அளவுக்கு நடந்து கொள்கிறார்.

 முதல் வாரம்

முதல் வாரம்

முதல் ஆளாக நித்யாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்ய வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நித்யா இருந்தால் தான் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை ஏற்படும் என்பதால் அவரை வெளியேற்றுவது சந்தேகமே. நித்யா பொய் சொல்வதை பார்த்த பார்வையாளர்கள் இதற்கு ஜூலி எவ்வளவோ மேல் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X