பிக் பாஸ் வீட்டை போர்க்களமாக மாற்றிய வெங்காயம்: நித்யாவுக்கு இவ்வளவு அடம் ஆகாது
Recommended Video

சென்னை: கணவர் தாடி பாலாஜி சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக நறுக்கி வைத்த வெங்காயத்தை குப்பையில் போட்டாலும் போடுவேனே தவிர கேரட் பொறியலில் சேர்க்க மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார் நித்யா.
பிக் பாஸ் வீட்டில் 3வது நாள் சமைக்கும் பொறுப்பு நித்யாவுடையது. மதியம் ரசம், சாதம், கேரட் பொறியல், முட்டை செய்கிறார். அவருக்கு மும்தாஜ், மகத் ஆகியோர் உதவி செய்கிறார்கள்.
கேரட் பொறியலில் வெங்காயம் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தாடி பாலாஜி கூறுகிறார்.

பாலாஜி
வெங்காயம் ஏற்கனே நறுக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் வெங்காயத்தை பயன்படுத்த மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார் நித்யா. மும்தாஜ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.

கெஞ்சல்
மகத் தன் பங்கிற்கு பேசியும், கெஞ்சியும் கூட பார்த்துவிட்டார். ஆனால் நித்யா மசியவில்லை. நறுக்கி வைத்த வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு இரவு பயன்படுத்தலாம் என்கிறார் நித்யா.

பிரச்சனை
வெங்காயத்தை நறுக்கி வைத்து பயன்படுத்துவது நல்லது கிடையாது என்கிறார் ஐஸ்வர்யா. அப்படியா, அப்படி என்றால் வேஸ்ட் செய்துவிடலாம். பிரச்சனை இல்லை என்கிறார் நித்யா.

அடம்
உணவுப் பொருளை வீணடித்தாலும் வீணடிப்பேன் ஆனால் பாலாஜி சொன்னதை மட்டும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார் நித்யா.நான் சமைக்கும்படி தான் சமைப்பேன். வெங்காயத்தை சேர்க்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா, மகத்திடம் தெரிவித்தார் நித்யா. நித்யாவின் திமிர், அடம் பார்ப்பவர்களை எரிச்சல் அடைய வைத்தது.


Click it and Unblock the Notifications











