அந்த பழம் தான் இந்த பழம்னு பொய் சொல்லி அசிங்கப்பட்ட நித்யா: குட்டு வைத்த கமல்

By Siva

சென்னை: வெங்காய விஷயத்தில் நித்யா கமலிடம் பொய் சொல்லி அசிங்கப்பட்டார்.

பிக் பாஸ் வீடு கமல் வந்த பிறகே களைகட்டியது. அதற்காக வாரம் முழுக்க கமலால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது. ஆனால் அவர் அந்த வெங்காய விஷயத்தை விசாரித்த விதம் பாராட்டுக்குரியது.

மேலும் சென்றாயனை பாத்ரூம் கழுவவிட்டதையும் மறக்காமல் விசாரித்தார்.

ஜனனி

ஜனனி

எந்த அடிப்படையில் ஒவ்வொருத்தருக்கும் பொறுப்பு கொடுத்தீர்கள் என்று ஜனனியிடம் கேட்டார் கமல். சென்றாயன், டேனியை அவர் பாத்ரூம் கழுவவிட்டதால் எழுந்த விமர்சனம் கமல் காதில் விழாமலா போயிருக்கும்.

பாத்ரூம்

பாத்ரூம்

நானும் பாத்ரூம் கழுவியிருக்கிறேன் என்று சென்றாயனிடம் தெரிவித்தார் கமல். ஆசிரியர் பகவானை டிரான்ஸ்பர் செய்யக் கூடாது என்று மாணவர்கள் அழுது புலம்பி அரசின் முடிவை மாற்ற வைத்ததை பாராட்டினார் கமல்.

யாஷிகா

யாஷிகா

தூக்கத்தை கெடுத்துக் கொண்டு வெங்காயம் வெட்டி அப்போது விரலை கட் செய்து கொண்டும் அது குறித்து குறை சொல்லாத யாஷிகா, டேனியலை கமல் பாராட்டினார். காயம் பட்ட கை வலிக்கிறதா என்று கூட கேட்டார்.

கேரட்

கேரட்

பெரியார் அடிக்கடி வெங்காயம் என்று சொல்வார். ஆனால் அந்த வெங்காயம் இங்கே பயன்படாமல் போய்விட்டதே என்றார் கமல். பாக்கெட்டில் கேரட்டுன் வந்து நித்யாவுக்கு குட்டு வைத்தார்.

நித்யா

நித்யா

வெங்காய விஷயம் குறித்து கமல் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தினார். கமல் ஒரு கேள்வி கேட்க நித்யாவோ நான் பிடித்த முயலுக்கு மூனே கால் என்று வேறு கதை சொல்லிக் கொண்டிருந்தார். 15 பேரும் வந்து தனக்கு தொல்லை கொடுத்ததாக நித்யா பொய் சொன்னார்.

திமிர்

திமிர்

நான் சொன்னதனால் தான் பாலாஜி சொல்லி நான் செய்ய வேண்டுமா என்று வீம்புக்கு செய்தார் என்றார் பாலாஜி. அந்த பழம் தான் இந்த பழம் என்று மீண்டும் மீண்டும் நித்யா பொய் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் கமல் விடுவதாக இல்லை. கமலிடம் இருந்து தப்பிக் முடியாது என்பதை உணர்ந்த நித்யா இறுதியில் மன்னிப்பு கேட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X