»   »  'விஸ்வாசி' பாலாஜியை நித்யாவுடன் சேர்த்து வைத்த பிக் பாஸ்: அட உண்மை தான் பாஸ்

'விஸ்வாசி' பாலாஜியை நித்யாவுடன் சேர்த்து வைத்த பிக் பாஸ்: அட உண்மை தான் பாஸ்

By Siva
Subscribe to Oneindia Tamil
பாலாஜியை நித்யாவுடன் சேர்த்து வைத்த பிக் பாஸ்- வீடியோ

சென்னை: தாடி பாலாஜியை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார் நித்யா.

கணவன் மனைவியான தாடி பாலாஜியும், நித்யாவும் சில பிரச்சனைகளால் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் நித்யா. இந்நிலையில் தான் இருவரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதில் நித்யா எவிக்ட் ஆகிவிட்டார், பாலாஜி இன்னும் பிக் பாஸ் வீட்டில் உள்ளார்.

பாலாஜி

இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தார் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். இந்நிலையில் நித்யா பிக் பாஸ் வீட்டிற்கு தனது மகள் போர்ஷிகாவுடன் வந்து கணவர் தாடி பாலாஜியிடம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கடிதம்

கடிதம்

முன்னதாக நித்யா பாலாஜிக்கு ஒரு கடிதம் எழுதியருந்தார். அதில் புறம் பேசாதே என்று அறிவுரை கூறியதுடன் நட்பு ரீதியாகவே கடிதம் எழுதியதாக தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அவர் கடிதத்தில் ஃபிரெண்ட் அன்ட் ஃபிரெண்ட் ஒன்லி என்று எழுதியிருந்ததை பார்த்த பாலாஜி ஓரமாக போய் உட்கார்ந்து அழுதார்.

கஷ்டம்

கஷ்டம்

தன் கடித்ததால் பாலாஜியை அழ வைத்ததற்காக பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நித்யா. இந்த 9 ஆண்டுகளில் நீ அழுது நான் பார்த்ததே இல்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார் நித்யா. பாலாஜியும், நித்யாவும் கட்டிப்பிடித்து பாசமாக பேசியதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு அவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

விவாகரத்து

விவாகரத்து

விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்ற பிறகும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததே நித்யாவுடன் மீண்டும் சேர வேண்டும் என்ற ஆசையில் தான் என பாலாஜி தெரிவித்திருந்தார். இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்தால் பாலாஜியின் ஆசை நிறைவேறிவிடும் போன்று. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நித்யா தான் அளித்த பேட்டிகளில் வேறு மாதிரி பேசியிருந்தாரே.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    According to the promo video released today, Nithya has visited Bigg Boss 2 Tamil house and apologised to her husband Balaji for her recent letter.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more