இனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது

By Siva

Recommended Video

நித்யாவை வெளியேற்ற காரணம் என்ன?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் ஏமாற்றிவிட்டார் என்று பார்வையாளர்கள் நொந்து போயுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பதிலேயே யாஷிகாவும், மகத்தும் தான் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள். ஐஸ்வர்யாவும், ஷாரிக்கும் அவ்வப்போது நம்மை கடுப்பேற்றும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் யாஷிகாவை வெளியேற்ற பார்வையாளர்கள் விரும்பினார்கள்.

யாஷிகா

யாஷிகா

யாஷிகாவை யாரும் காப்பாற்றாதீர்கள், அவரை இந்த வாரம் வெளியே அனுப்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஓவர் ஆக்டிங்

ஓவர் ஆக்டிங்

யாஷிகாவுடன் சண்டை போட்டு கடுப்பான மகத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்புவதாக தெரிவித்தார். நல்லா இருப்பீங்க பிக் பாஸ் அந்த பய புள்ளைய முதலில் வெளியே அனுப்புங்கள் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பார்வையாளர்களை ஏமாற்றுவதையே ஒரு வேளையாக வைத்துள்ளார் பிக் பாஸ். யாஷிகாவா, மகத்தா என்று எதிர்பார்த்த நிலையில் நித்யாவை வெளியே அனுப்பி வைத்துவிட்டார்.

கண்ணீர்

கண்ணீர்

8 மாதங்களாக பார்க்காமல் இருந்த மனைவி நித்யாவை பார்த்து பேச கிடைத்த சந்தர்ப்பம் முடிந்ததை நினைத்து பாலாஜி கண் கலங்கினார். நித்யாவோ பாலாஜியை கட்டிப்பிடித்து கோபப்படாத, ஜெயிச்சுட்டு வா, கெட்ட வார்த்தை பேசாத என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீடு

பாலாஜி வீட்டில் பிக் பாஸ் நடக்கிறது என்று இனி யாரும் பிக் பாஸை கிண்டல் செய்ய முடியாது. ஒரு வேளை அந்த கடுப்பில் தான் நித்யாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X