கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க சென்றாயன், நித்யா இதெல்லாம் டூ டூ மச் #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை:காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார் சென்றாயன்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள சென்றாயன் பெண் போட்டியாளர்கள் என்றால் குஷியாகிவிடுகிறார். ஓவியாவை பார்த்து ஓவர் ஜொள்ளுவிட்டார். காமெடி என்ற பெயரில் அவர் பேசுவதை பார்த்தால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதன்னு எத்தனை தடவை சொல்வது என்று சந்தானம் ஒஸ்தி படத்தில் சொல்வது நான் நினைவுக்கு வருகிறது.

ஆங்கிலம்
மிஸ்டர் சென்றாயன் நீங்கள் கலந்து கொண்டுள்ளது தமிழ் பிக் பாஸ். பார்வையாளர்கள் அனைவருக்கும் தமிழ் தெரியும். அப்படி இருக்கும்போது சிசிடிவி கேமராவுக்கு முன்பு வந்து ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று அந்த மொழியை கொலை செய்கிறீர்கள்.

பார்வையாளர்கள்
சென்றாயன் நீங்கள் தமிழில் பேசுங்கள் அதுவே போதும். ஆங்கிலத்தில் பேசினால் தான் பிறர் மதிப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து தான் பார்வையாளர்கள் உங்கள் மீது கொலவெறியில் உள்ளனர்.

கோபம்
ஐஸ்வர்யா தத்தா, யாஷிகாவுடன் சேர்ந்து சென்றாயன் பிச்சை எடுப்பது போன்று நடிப்பதை பார்த்தால் காசு அல்ல கட்டையை தூக்கிப் போடணும் போன்று எரிச்சல் வருகிறது.

கடுப்பு
ஏம்மா நித்யா உங்களுக்கு தமிழ் பேச வாராதா?. ஓரேயடியாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். முதலில் நம் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்க. நீங்க ஓவராக பீட்டர் விடுவதை பார்த்து பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

ஓவர் ஆக்டிங்
நித்யா தனது மகள் போர்ஷிகா பற்றி பேச வைஷ்ணவி உங்களுக்கு மகள் இருக்கிறாரா பார்த்தால் தெரியவில்லையே என்று அதிர்ச்சி அடைகிறார். இதெல்லாம் டூ மச் மா.

கிண்டல்
பிக் பாஸ் போட்டியாளர்களை மற்றவர்கள் தான் கிண்டல் செய்கிறார்கள் என்றால் பிக் பாஸும்ல கலாய்க்கிறார். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று காலையில் பாடல் போட்டு கலாய்த்துள்ளார். போடா, அந்த பிக் பாஸே மீம்ஸ் கிரியேட்டர்கள் பக்கம் தான்.


Click it and Unblock the Notifications











