யார் இந்த ராணா? வீட்டிற்கு வந்த தர்ஷனுக்கு காத்திருந்த ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில்,சக்தியும் ஜனனியும் தங்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது ஜனனி, சக்தி, இப்போதே ஒரு பிசினஸ் தொடங்குவதற்கான யோசனையைப் பார். இப்படியே இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனைகள் உருவாகிவிடும் என்கிறார். அதற்கு சக்தி, அதற்கான யோசனைகள் இருக்கிறது ஜனனி. ஆனால், முதலில் நீ நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு நம்முடைய பிசினஸ் பற்றி யோசிக்கலாம் என்கிறார். ஆனால், ஜனனி அதற்கு சம்மதிக்காமல், குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன். அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதற்குள் ஒரு நல்ல பிசினஸ் ஐடியாவை தயார் செய்துவை என்கிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், நீண்ட நாட்களுக்குப் பிறகு தர்ஷன் வீட்டிற்கு வருகிறான். அவனைப் பார்த்ததும் ஈஸ்வரி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். பின் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தர்ஷன் அன்பாக நலம் விசாரித்து பேசுகிறான். அந்த நேரத்தில் ராணாவும் வீட்டிற்கு வருகிறார். ராணாவை பார்த்த குணசேகரன், இவர் நம்ம வீட்டுக்கு மிகவும் முக்கியமானவர் என்று கூறி அறிமுகப்படுத்துகிறார். வீட்டிலுள்ள அனைவருக்கும் அவரை அறிமுகப்படுத்துகிறார்.
யார் இந்த ராணா: அதன் குணசேகரன், உன் சித்தப்பா கதிர், ஞானம் இரண்டு பேரும் புது பிஸ்னஸ் ஆரம்பிக்க போறாங்க நீயும் நல்ல நேரத்தில் தான் வந்து இருக்க. அந்த விழாவில் கட்டாயம் நீ இருக்க வேண்டும் என சொல்கிறார். உடனே தர்ஷன், அத்தனை நாள் லீவ் கிடைக்குமா என்று எனக்கு தெரியாது என்று சொல்கிறார். உடனே ராணா, தர்ஷன் கட்டாயம் லீவ் கிடைக்கும் ட்ரைப்பணி பாருங்க என்று சொல்ல, தர்ஷன் மேனஜருக்கு ஃபோன் செய்வதற்காக செல்கிறார். அதற்குள் ராணா யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மேனேஜருக்கு லீவ் கொடுக்கும் மெசேஜ் அனுப்பிவிடுகிறார். இதையடுத்து போன் பேசிவிட்டு உள்ளே வரும் தர்ஷன், அப்பா லீவ் கிடைத்துவிட்டது என்று சந்தோஷமாக சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
