அநாகரீகமாக பேசிய நெட்டிசன்ஸ்…வெளுத்துவாங்கிய தாடி பாலாஜியின் மனைவி நித்யா!
சென்னை : தாடி பாலாஜியின் மனைவி நித்யா இன்ஸ்டாவில் அநாகரீகமாக பேசிய நபரை வெளுத்து வாங்கி உள்ளார்.
இணையத்தில் மிகுந்த ஆக்டிவாக இருக்கம் நித்யா தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தாடி பாலாஜியும் நித்யாவும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

தாடி பாலாஜி
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளவர் தாடி பாலாஜி. குறிப்பாக வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக வந்து கலக்கியுள்ளார். அதன்பின்னர் அவர் சின்னத்திரையிலும் தொகுப்பாளர் மற்றும் நடுவர் என பல பரிமானங்களில் வந்துள்ளார். குறிப்பாக விஜய் டிவியில் முதலில் கலக்க போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக வந்துள்ளார்.

குடும்ப பிரச்சினை
திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பாப்புலர் ஆகி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக, தொகுப்பாளராக இருந்து வருகிறார் தாடி பாலாஜி. அவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவிடம் இருந்து பிரிந்து இருந்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டில்
பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என நித்யா குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் தான், நித்யாவையும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்தது விஜய் டிவி. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி முடியும்போது பாலாஜி நித்யா இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்பது போலவும் காட்டப்பட்டது. ஆனால் அதற்கு பின்னும் அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

இன்ஸ்டாவில் சண்டை
நித்யா அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நித்யா தன்னுடைய மகளுடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். அதற்கு ஒரு நெட்டிசன், இந்த மாதிரி எல்லாம் பொது இடத்தில் ஏன் ஆடுகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு நித்யா , அதை நான் முடிவு செய்து கொள்கிறேன் என்று பதிலளித்திருக்கிறார்.

இல்லைன்னா என்ன செய்வே?
மேலும் தொடர்ந்து சில அநாகரிகமான கமெண்டுகளை அந்த நபர்கள் கொடுக்கவே அதற்கும் காட்டமான பதிலடியை கொடுத்திருக்கிறார் நித்யா. இதையடுத்து மற்றொரு நபர், உங்கள் குழந்தைக்காகதான் உங்களை சும்மா விடுகிறேன் என்று சொல்ல, இல்லைன்னா என்ன செய்வே? என்று காட்டமாக பதிலளித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











