ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்லும் ஜனனி: சேஃபா விளையாடும் பிக் பாஸ்?
Recommended Video

சென்னை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்லும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்துள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்ல போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் கையில் ஒரு கோப்பையில் தண்ணீரை வைத்து சுற்றி வர வேண்டும்.
இந்த டாஸ்க் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது.
ஜனனி
இந்த டாஸ்கில் ஐஸ்வர்யாவை ஜெயிக்க வைத்துவிடுவார் பிக் பாஸ் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக ஐஸ்வர்யா ஜெயிக்கவில்லை. மாறாக ஜனனி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனனி ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பிக் பாஸ்
டாஸ்குகளில் பங்கேற்றாலும் ஜனனி ஸ்டிராங்கான போட்டியாளர் இல்லை என்பதே பார்வையாளர்களின் கருத்து. பிரச்சனை என்று வந்தால் நைசாக நழுவி விடுவார். இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் ஜனனியை ஃபினாலே வாரத்திற்கு அனுப்புவது கூட பிக் பாஸின் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
[Read This: இடுப்பில் கையை போட்ட சினேகன்: நைசாக நழுவிய ஐஸ்வர்யா, ஆரம்பிச்சுட்டாருல]

பார்வையாளர்கள்
ஏற்கனவே பார்வையாளர்கள் பிக் பாஸை ஐஸ்வர்வாயாவால் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். இந்நிலையில் இந்த தண்ணீர் டாஸ்கில் ஐஸ்வர்யாவை வெற்றி பெற வைத்தால் மேலும் குமுறுவார்கள் என்று நினைத்து இப்படி செய்திருக்கலாம். கமல் வேறு ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்தார். வர வர கேள்வி எல்லாம் கேட்கிறார். அதனால் பிக் பாஸ் அடக்கி வாசிக்கிறாரோ?

பாரபட்சம்
ஒரு போட்டியாளரை காப்பாற்ற பிக் பாஸ் இந்த அளவுக்கு கஷ்டப்படுவது தமிழில் தான் நடக்கிறது. மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனையும் சுதந்திரமாக செயல்பட விடுவது இல்லை. கமலை கோபப்படுவது போன்று எல்லாம் நடிக்க வைத்து அந்த மனிதரின் தரத்தை குறைத்துவிட்டார் பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











