கையைப் பிடித்து கெஞ்சிய கோபி.. சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த ராதிகா!

சென்னை : விஜய் டிவியின் பிரபல தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் பல விறுவிறுப்பான எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியாவிடம் விவாகரத்து பெற்றுள்ள கோபி, வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அடுத்தக்கட்டமாக தன்னுடைய பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார் பாக்கியா. அவரது தலையில் தற்போது குடும்பத்தின் பாரம் இறங்கியுள்ளது.

பிரபல தயாரிப்பாளரை சந்தித்த அஜித்...எதற்கு இந்த திடீர் சந்திப்பு?...அப்டேட் லோடிங்கா?'

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவி அடுத்தடுத்து சிறப்பான தொடர்கள், நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகிறது. புதிய தொடர்களுக்கும் அஸ்திவாரம் போட்டு வருகிறது. ஏற்கனவே ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது 600 எபிசோட்களை கடந்துள்ளது. இதையொட்டி அந்த தொடரின் நடிகர்கள் இதை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

600 எபிசோட்கள்

600 எபிசோட்கள்

குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட குழுவினரின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பாக்கியாவாக நடித்துவரும் சுசித்ரா. தொடர்ந்து பல பரபரப்பான எபிசோட்களை இந்த தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இதையொட்டி டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.

விவாகரத்து கொடுத்த பாக்கியா

விவாகரத்து கொடுத்த பாக்கியா

இந்தத் தொடரில் தன்னுடைய காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததால் கோபியை அவருடைய காதலி மற்றும் பாக்கியா இருவரும் ஒதுக்குகின்றனர். கோபியை விட்டுவிட்டு மும்பை செல்லும் திட்டத்தை கூறுகிறார் ராதிகா. இதேபோல தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார் மனைவி பாக்கியா.

வீட்டை விட்டு வெளியேறிய கோபி

வீட்டை விட்டு வெளியேறிய கோபி

தொடர்ந்து வீட்டிற்கு வரும் பாக்கியாவிற்கு ஆதரவாக அவரது மாமனார் பேசுகிறார். வீட்டை விட்டு போக வேண்டியது தன்னுடைய மகன்தான் என்று அவர் கூறுகிறார். இதையடுத்து வீராப்புடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் கோபி. முன்னதாக தான் அந்த வீட்டிற்காக செலவிட்ட தொகையை தரும்படி சவால் விடுகிறார். இந்த சவாலை ஏற்கிறாள் பாக்கியலட்சுமி.

புதிய ப்ரமோ

புதிய ப்ரமோ

இதனிடையே இந்த வாரத்தின் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ரோட்டில் ராதிகாவை பார்க்கும் கோபி, அவரிடம் தான் அவருக்காகத்தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துள்ளதாக பேசுகிறார். இதனால் அவர்மீது அனுதாபப்படுகிறார் ராதிகா. தொடர்ந்து தன்னுடன் வாழ விருப்பமில்லையா என அடுத்த அம்பை எய்கிறார் கோபி. இதையடுத்து கோபியுடன் வாழ விரும்புவதாக ராதிகா கூறுகிறார்.

கால அவகாசம் கேட்கும் ராதிகா

கால அவகாசம் கேட்கும் ராதிகா

தொடர்ந்து இந்த விஷயத்தில் தான் முடிவெடுக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் ராதிகா கூறுகிறார். இதையடுத்து ராதிகா இல்லையென்றால் தான் செத்து போய்விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் அச்சமடையும் ராதிகா, நம்பிக்கையுடன் காத்திருக்கும்படியாகவும் நல்லதே நடக்கும் என்றும் கூறுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X