இனிமே என் வாழ்க்கையில நீ கிடையாது.. கோபத்தில் பார்த்தி.. பரிதவிப்பில் காவ்யா!
சென்னை : விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சூழ்நிலை காரணமாக காவ்யா தான் விரும்புபவரை திருமணம் செய்ய முடியாமல் அவரது அண்ணனை திருமணம் செய்ய நேர்கிறது.
இதனால் இரு ஜோடிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக கொண்டு தினந்தோறும் பரபரப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ஒளிபரப்பி வருகிறது.
சிவாஜி, ரஜினி, கமல் தாலி கட்டிய மேடை..இனி பொதுமக்களும் பயன்படுத்தலாம்..ஏவிஎம்- ன் சூப்பர் திட்டம்!'

விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் அடுத்தடுத்த தொடர்கள் சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சேனலின் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி,பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்கள் ரசிகர்களை அதிகமாக ஈர்த்துள்ள நிலையில் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சில தொடர்கள் முதல் சீசனில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து தற்போது இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பி வருகின்றன.

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர்
அந்த வகையில் விஜய் டிவியில் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்தத் தொடர் மிகவும் உற்சாகமான எபிசோட்களை ஆரம்பத்தில் கொடுத்தது. ஜீவாவுடனான காவ்யாவின் காதல் மிகவும் சிறப்பாக காட்டப்பட்டது. இவர்களது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்று அவர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஜோடி மாறிய திருமணம்
அந்த அளவிற்கு இவர்களது காதல் மிகவும் சிறப்பாக அமைந்திருந்த நிலையில், பிரியா கடத்தப்பட பார்த்தியை காவ்யா திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதேபோல ஜீவா -பிரியா திருமணம் நடந்து முடிகிறது. இவ்வாறு ஜோடி மாறிய திருமணம் மற்றும் அது ஏற்படுத்திய வலியை ஏற்றுக் கொள்ள முடியாமல் இரு ஜோடியும் பரிதவிக்கும் நிலையில் அடுத்தடுத்த எபிசோட்களில் காட்டப்படுகிறது.

ஜீவா -பார்த்தி பெற்றோருக்கு 60ம் கல்யாணம்
ஒருவழியாக இரண்டு ஜோடியும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்போது அடுத்த ட்விஸ்டாக ஜீவா -பார்த்தியின் பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு வரும் குடும்ப நண்பர் ஒருவரை பார்த்து காவ்யா அச்சத்தில் ஒளிந்துக் கொள்கிறார். முன்னதாக ஜீவாவுடன் தான் ஒரு ஹோட்டலில் தங்க நேர்ந்தபோது அங்கு வந்த அந்த நபர் தனக்கு அட்வைஸ் செய்ததை நினைத்து அவரிடமிருந்து ஓளிந்துக் கொள்கிறார் காவ்யா.

வில்லத்தனம் செய்யும் மாமியார்
இதை தன்னுடைய மாமியார் பார்வதியிடம் அவர் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். மேலும் பார்த்தி தன்னிடம் கொடுத்த தாலியையும் பார்வதியிடம் கொடுக்கிறார். அவர் தாலியுடன் அங்கிருந்து சென்று விட்டதால் அந்த திருமணம் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து காவ்யாமீது ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த கோபத்துடன் காணப்படுகிறது இந்த நிலையில் மீண்டும் காவ்யா வீட்டிற்கு வருகிறார்.

காவ்யாவிடம் கோபத்தில் குடும்பத்தினர்
அப்போது அவரை நிறுத்தி வைத்து குடும்பமே கேள்வி கேட்கிறது. முன்னதாக கோயிலில் நடந்த சம்பவத்தின்போது காவ்யாவிடம் அங்கு நடைபெற்ற சம்பவம் குறித்து அவர் யாரிடமும் சொல்லக்கூடாது என்று பார்வதி சத்தியம் வாங்கிக் கொள்வதாலும் தான் ஹோட்டலில் மற்றொருவருடன் தங்கியிருந்ததை பார்த்தியிடம் கூற முடியாத காரணத்தாலும் எதையும் கூற முடியாமல் காவ்யா தவிக்கிறார்.

விவாகரத்து பேப்பர்களை கொடுக்கும் பார்த்தி
இதனிடையே தன்னிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காகவே காவ்யா அப்படி நடந்துக் கொண்டதாகவும் இனிமேல் காவ்யா என்பவர் தன்னுடைய வாழ்க்கையில் இல்லை என்றும் கோபத்துடன் கூறும் பார்த்தி, காவ்யாவிடம் தான் கையெழுத்துப் போட்ட விவாகரத்து பேப்பர்களை கொடுக்கிறார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழுகிறார் காவ்யா. இவ்வாறு அழுது நடிக்க வேண்டாம் என்று பார்த்தி கூறுவதாக இன்றைய ப்ரமோ காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











