Pandian stores serial: என் வாழ்க்கையில் கதிரை பார்க்கவே கூடாது.. கோபத்தின் உச்சியில் மீனா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

Vijay TVs Pandian stores serial new promo makes everyone thrilling

தொடரின் அடுத்தடுத்த ப்ரமோக்கள், எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் தொடர் சிறப்பான இடத்தை பிடித்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய ப்ரமோ வெளியீடு: சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களில் கலக்கி வருகிறது விஜய் டிவி. வாரந்தோறும் டிஆர்பியில் அதிகப் புள்ளிகளை சன் டிவி சீரியல்கள் முதலிடத்தை பிடித்து வருகின்றன. அடுத்தபடியாக இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பெற்று வருகின்றன விஜய் டிவியின் சீரியல்கள். பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை, ஈரமான ரோஜாவே 2 என இந்தப் பட்டியலில் விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் இடம்பிடித்து வருகின்றன.

அந்த வகையில் நேரடியாக தமிழில் உருவாகி ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றன. திருமணத்தில் மொய் எழுதுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் பிரிந்த சகோதரர்கள் 4 பேரும், தங்களின் புதுவீட்டின் கிரஹப்பிரவேசத்தில் மீண்டும் இணைந்தனர். இதையடுத்து தனத்தின் உடல்நலப் பிரச்சினையையும் கூட்டாக இணைந்து தீர்த்தனர்.

Vijay TVs Pandian stores serial new promo makes everyone thrilling

இதையடுத்து சீரியல் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மீனாவின் அப்பாவை, அவரது இரண்டாவது மருமகன் பிரஷாந்த், கத்தியால் குத்தியதையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தப் பிரச்சினையில் பிரசாந்த், சாட்சி சொன்னதையடுத்து போலீசார், மீனாவின் கணவன் ஜீவா மற்றும் அவரது தம்பி கதிரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குடும்பத்தில் இருவர் சிறைக்கு சென்றதையடுத்து குடும்பமே நிலைகுலைந்துள்ளது. பிரஷாந்தின் சாட்சியத்தை கேட்கும் மீனா, கோபித்துக் கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விடுகிறார். அவரை சமாதானப்படுத்த முயலும் குடும்பத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்நிலையில், தன்னுடைய கணவனை சிறையிலிருந்து மீட்கும் வகையில், கேஸை வாபஸ் வாங்க வைக்கும்வகையில், மீனா மற்றும் அவரது அம்மாவிடம் பேசப் போகிறார் முல்லை. உடன் கண்ணனும் செல்கிறார்.

Vijay TVs Pandian stores serial new promo makes everyone thrilling

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், முல்லையிடம் தன்னுடைய ஆத்திரத்தை கொட்டித் தீர்க்கிறார் மீனாவின் அம்மா. தன்னுடைய குடும்பம் நிலைகுலைந்து போனதற்கு காரணம் முல்லையின் கணவன் கதிர் என்று அவர் கூறுவதைக் கேட்டு செய்வதறியாது திகைக்கிறார் முல்லை. இதையடுத்து கதிர் இதை செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களா என்று மீனாவிடம் கேட்கிறார். இதனால் வெகுண்டெழும் மீனா, தன்னுடைய குடும்ப விஷயத்தில் ஏன் கதிர் தலையிட வேண்டும் என்று கேட்கிறார்.

Baakiyalakshmi serial: தொடர்ந்து அலைகழிக்கப்படும் பாக்கியா.. ஊழியர்கள் முன்பு ஆத்திரப்பட்ட ராதிகா!
தொடர்ந்து இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் தான் கதிரை பார்க்கவே கூடாது என்று கோபத்துடன் கத்துகிறார். இதனால் அவரை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் முல்லை மற்றும் கண்ணன் திரும்புகின்றனர். இதனால் ஜீவா மற்றும் கதிர் இருவருக்கும் ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் ஜனார்த்தனன் தேறினால் மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வாகும். இதனிடையே இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X