பிக்பாஸ் குசும்புகாரர்.. அடுத்த வாரம் மீராவ பிக்பாஸ் கேப்டனாக்கிட்டாருன்னா? அய்யய்யோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுனுக்கும் வனிதாவுக்குமான மோதல் முற்றியுள்ள நிலையில் அடுத்தவாரம் மீரா வீட்டின் கேப்டனானால் என்ன நடக்கும் என நெட்டிசன்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் ஹவுஸ் மேட்ஸ் பேசுவதை காதில் வாங்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதை போல தான் பேசுவதையேதான் பேசி வருகிறார்.

இதனால் பிக்பாஸ் வீடு ரணகளமாகி வருகிறது. கேப்டனான வனிதாவுக்கும் மீராவுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்துவருகிறது. இந்நிலையில் இந்த வாரத்துடன் வனிதாவின் கேப்டன் பொறுப்பு முடிவதால், அடுத்த வாரம் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார். "தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்".. 'பிக் பாஸ்' மீராவின் தாய் போலீசில் புகார்

அடிதடிக்கு கேரண்டி

அடிதடிக்கு கேரண்டி

கலகம் செய்வதிலும் சண்டை மூட்டி விடுவதிலும் கில்லாடியான பிக்பாஸ் நிச்சயம் மீராவை கேப்டனாக்கி டிவிஸ்ட் வைப்பார் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். மீரா கேப்டனானால் பிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு கேரண்டி நிச்சயம் என்கின்றனர் ரசிகர் பெருமக்கள்.

பாட்டு கம்போஸ்

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் போது, ஆண்கள் பாட்டை கம்போஸ் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் இந்த நெட்டிசன்.

சேரனும் தர்ஷனும் சூப்பர்

எதார்த்தத்தை அமைதியாகவும், ஆறுதலாகவும் பேசி ஒருத்தருக்கு அவர் தவறை புரிய வைக்க முயல்வதில் சேரனும் தர்ஷனும் சூப்பர்... என்கிறார் இந்த நெட்டிசன்

மீரா தலைவரானால்

என்னமோ போங்க அடுத்த வாரம், பெரியபாஸ் எதுனா பண்ணி மீரா வீட்டின் தலைவரா ஆகிட்டாருன்னா.. உண்மையான WWE சண்டை பாக்கலாம்போல.. என்கிறார் இந்த நெட்டிசன்.

டப்பாங்குத்து பாட்டு

நல்ல வேளை அனந்த் வைத்தியநாதன் இந்த சீசன்ல வரல.
யோவ் சாண்டி மாஸ்டர்
நான் ஏதோ டப்பாங்குத்து பாட்டுனு நினச்சேன்.. மார்கழி திங்கள் அல்லவா.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

யப்பா டேய்..

இந்த மீரா டோட்டலி ஃபேக்!! சேரன் சார் பாயிண்ட்ட பேசுறாரு.. யப்பா டேய்... என்கிறார் இந்த நெட்டிசன்.

வனிதாவ அனுப்பல

நல்லவேளை பிக்பாஸ், எங்க சீசன்ல வனிதாவை நீங்க அனுப்பல என வையாபுரி பேசுவதை போன்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நூத்துல ஒரு வார்த்த

சேரன் டூ வனிதா விஜயகுமார்: பேச்சு கம்மியா பேசு, புரிஞ்சிகிட்டா புரிஞ்சிக்கட்டும், இல்லனா போகட்டும், அமைதியா பேசு எல்லோர்கிட்டையும். #செம் பீலிங்கு சார்.. நூத்துல ஒரு வார்த்த.. என்கிறார் இந்த நெட்டிசன்.

காயத்ரி என்பது உறுதி

மீராவிடம் வனிதா விஜயகுமார்: நான் வேணும்னே தான் பாத்திரம் கழுவ முடியலைன்னா, டாய்லெட் கழுவுன்னு சொன்னேன். இப்படி பேசுவான்னு தெரிஞ்சி தான் சொன்னேன். அவ எங்கிருந்து வந்தா? பிக்பாஸ் தமிழ் சீசன் 3ன் காயத்ரி என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X