twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்”.. 'பிக் பாஸ்’ மீராவின் தாய் போலீசில் புகார்

    தங்கள் மீது அவதூறு பரப்புவதாக, பிக் பாஸ் போட்டியாளர் மீராவின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil: தன்னை தானே சூப்பர் மாடல் என்று பெருமை கூறும் மீரா- வீடியோ

    சென்னை: தன் மகள் மீது பரப்பப்படும் அவதூறு கருத்துக்களால், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுனின் தாய் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருப்பவர் நடிகை மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் மீது, அழகிப்போட்டி நடத்தி பெண்களை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் கைது செய்யப்படுவார் என்ற சூழலில்தான் பிக் பாஸ் போட்டியாளர் ஆனார் மீரா. பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து அவர் கைது செய்யப்படுவார் என அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ள ஜோ மைக்கேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்திருந்தார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இனி வரும் நாட்களில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறலாம் எனத் தெரிகிறது.

    நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா.. சேரனையே டென்ஷனாக்கிய மீரா! நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா.. சேரனையே டென்ஷனாக்கிய மீரா!

    தாய் புகார்:

    தாய் புகார்:

    இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மீராவை வெளியேற்ற சதி நடப்பதாக அவரது தாய் சியாமளா (54) போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அப்புகாரில் அவர், "என் கணவர் மணி இறந்து விட்டார். மகள் தமிழ்செல்வியுடன் வசித்து வருகிறேன். மீரா மிதுன் என்ற பெயரில், 'மாடலிங்' தொழிலில் ஈடுபட்டு வரும் என் மகள், சூர்யா நடித்த, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    மாடலிங் பயிற்சி:

    மாடலிங் பயிற்சி:

    மாடலிங் துறையில், வடமாநில பெண்கள் கோலோச்சி வரும் நிலையில், தமிழ் பெண்ணான என் மகள், பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைத்துள்ளார். 'மிஸ் சவுத் இந்தியா' என்ற பட்டமும் பெற்றுள்ளார். தமிழகத்தில், மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பெண்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறார்.

    மிஸ் தமிழ்நாடு திவா:

    மிஸ் தமிழ்நாடு திவா:

    வடபழனியில், 14 தமிழ் பெண்கள் பங்கேற்கும், 'மிஸ் தமிழ்நாடு திவா' என்ற அழகி போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்கு, என் மகளுடன் மாடலிங் துறையில் ஏற்கனவே பணியாற்றி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் முட்டுக்கட்டை போட்டனர். 'தமிழகத்தில், அழகி போட்டியை நடத்தக்கூடாது' என, கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    போலீசில் புகார்:

    போலீசில் புகார்:

    அவர்கள் மீது போலீசில் மீரா மிதுன் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜோ மைக்கேல் பிரவீன், என் மகள் மோசடி பேர்வழி என போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்நிலையில், என் மகள், பிரபல தனியார், 'டிவி' ஒன்றில் ஒளிபரப்பாகி வரும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து அவளை வெளியேற்ற வேண்டும் என, ஜோ மைக்கேல் பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் சதி செய்கின்றனர்.

    தற்கொலை முடிவு:

    தற்கொலை முடிவு:

    மீரா மிதுன் பற்றியும், எங்கள் குடும்பத்தார் பற்றியும், சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்பி வருகின்றனர். இதனால், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணமான, ஜோ மைக்கேல் பிரவீன் உள்ளிட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இவ்வாறு சியாமளா தெரிவித்துள்ளார்.

    சர்ச்சை நாயகி:

    சர்ச்சை நாயகி:

    ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் மீராவால் தினமும் பல்வேறு பிரச்சினைகள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில் அவரது தாயார் இப்படி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சைகளில் சிக்கியுள்ள மீரா வெளியேற்றப்படுவாரா அல்லது கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

    English summary
    The bigg boss 3 contestant, model and actress Meera Mithun's mother filed a police complaint that they are threatened by some persons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X