நீங்க அந்த குறும்படம் போட்டப்பவே இது தான் நடக்கும்னு எங்களுக்கு தெரியும் பிக் பாஸ்
Recommended Video

சென்னை: பார்வையாளர்கள் சொன்னது போன்றே பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தாடி பாலாஜி வீட்டில் நடக்கிறது என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு புருஷன், பொண்டாட்டி பிரச்சனையையே காட்டுகிறார்கள்.
கமல் கூட சனிக்கிழமை ரொம்ப நேரமாக பாலாஜி, நித்யா பிரச்சனையை தான் பஞ்சாயத்து செய்தார்.

மமதி
பிக் பாஸ் வீட்டில் உள்ள பலருக்கும் நித்யாவை பிடிக்கவில்லை. அவரை தான் முதலில் வெளியே அனுப்ப நினைத்தார்கள். ஆனால் மமதி சாரி சென்றுள்ளார்.

பாலாஜி
நித்யா இருந்தால் தான் பாலாஜி கோபப்படுவார், பிரச்சனை வரும். அதனால் நித்யாவை அவ்வளவு சீக்கிரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற மாட்டார்கள் என்று பார்வையாளர்கள் கூறியது சரியாகிவிட்டது.

திட்டு
ஏற்கனவே காவல் நிலையம், நீதிமன்றம் வரை சென்று மோதிக் கொண்ட கணவன், மனைவியை ஒரே வீட்டில் தங்க வைத்தால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் இப்படி செய்துள்ளார் பிக் பாஸ். இது எல்லாம் நல்லாவே இல்லை என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

குறும்படம்
கமல் சனிக்கிழமை இரண்டு குறும்படங்கள் போட்டுக் காண்பித்தார். இரண்டுமே நித்யாவுக்கு ஆதரவானது. அதில் இருந்தே அவரை இப்போதைக்கு எலிமினேட் செய்ய மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.

கண்டிப்பு
கெட்ட வார்த்தை பேசியதற்காக தாடி பாலாஜியை கண்டித்த கமலை பாராட்டியே ஆக வேண்டும். அதே சமயம் மகத் ஃபன் என்ற பெயரில் செய்யும் சேட்டைகளை கமல் கண்டிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.


Click it and Unblock the Notifications











