Simbu - என்னது அந்தப் படத்தில் முதலில் சிம்பு நடிக்க வேண்டியதா?.. விஷால் நடித்து சூப்பர் ஹிட்டாகிடுச்சே
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். கதை தேர்வில் அதகளம் செய்து வரும் அவர் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று பெரும் நம்பிக்கையோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் விஷால் நடித்து ஹிட்டான படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், நடனம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என எந்த ஃப்ளாட்பார்மிலும் தனது தடத்தை ஆழமாக பதித்தவர். இடையில் சில காரணங்களால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தத்தளித்த சிம்பு ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்டு மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாகவே தொடங்கியது. ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாநாடு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

வரிசையான ஹிட்: மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் பணியாற்றினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் எஸ்டிஆர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் குதூகலித்தனர். அப்படிப்பட்ட சூழலில் பத்து தல படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் சிம்புவின் நடிப்பு மேற்கொண்டு மெருகேறியிருந்தது.
எஸ்டிஆர் 48: இந்த சூழலில் அவர் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரிக்க; கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்குகிறார். முதல் படத்திலேயே தேசிங்கு பெரியசாமி கவனம் ஈர்த்தவர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
KPY Bala - KPY பாலா உதவி செய்வதற்கான காரணம் இதுதான்.. அவரே அதிரடியாக கூறிய செம பதில்
ரஜினிக்கான கதை: அதுமட்டுமின்றி இந்தக் கதையை முதலில் தேசிங்கு ரஜினியிடம்தான் கூறினார். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் விலகிவிட சிம்பு உள்ளே வந்தார். ஏற்கனவே பத்து தல படத்தையும் ரஜினியை வைத்து உருவாக்குவதற்கே முயற்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கான கதை சிம்புவுக்கு வந்தாலும் இதில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தேசிங்கு பெரியசாமி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
அனிமல் ஆல்ஃபா மேல் படம் அல்ல சரியான சங்கி படம்.. பிற மதங்களை இழிவுப்படுத்துகிறது.. ஃபேன்ஸ் பகீர்!
திமிரு: இந்நிலையில் சிம்பு நடிக்க வேண்டிய படம் ஒன்றில் விஷால் நடித்தது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இயக்குநர் தருண் கோபி இயக்கிய திமிரு படத்தின் கதையை முதலில் சிம்புவிடம்தான் சொன்னாராம். கதையை கேட்ட சிம்புவின் தாய் உஷா, 'இதில் வில்லி கதாபாத்திரத்துக்குத்தானே முக்கியத்துவம் இருக்கிறது. எனவே சிம்பு நடித்தால் அவருக்கு ஸ்கோப் இருக்காது. வேறு ஒரு கதையில் பணியாற்றிக்கொள்ளலாம்’ என கூறி மறுதலித்துவிட்டாராம். பிறகுதான் அந்தக் கதை விஷாலிடம் சென்றிருக்கிறது. தருண் கோபியின் திமிரு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு; அடுத்தாக அவரது இயக்கத்தில் காளை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











