சந்தானத்தை பழி வாங்க போடப்பட்ட பிளான்.. இவரே திருப்பி கொடுத்த சம்பவம்.. என்ன நடந்தது?

சென்னை: நடிகர் சந்தானம் காமெடி ரோல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக நடித்துவருகிறார். ஒருசில படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன. கடைசியாக அவர் நடித்திருந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம்கூட பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அமளி துமளி, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

சிம்புவால் திரைத்துறைக்கு வந்தவர் சந்தானம். கோலிவுட்டில் குறுகிய காலத்திலேயே டாப் காமெடி நடிகராக வளர்ந்துவிட்டார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, ரவி மோகன் என அத்தனை ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். குறிப்பிட்ட வருடங்களுக்கு முன்னர் எல்லாம் ஹீரோ இல்லாமல்கூட தமிழ் படம் ரிலீஸாகும்; ஆனால் சந்தானம் இல்லாமல் ரிலீஸாகாது. அப்படித்தான் இருந்தது நிலைமை. ஒருகாலத்தில் வடிவேலு எவ்வளவு பிஸியாக இருந்தாரோ அதே அளவுக்கு சந்தானமும் இருந்தார்.

Santhanam s Throwback School Story Leaves Fans in Splits Everyone Kept Standing Up
Photo Credit:

ஹீரோ ஆசை கொண்ட சந்தானம்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாகும் ஆசை வந்தது. அதன்படி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். படம் சுமார் ஹிட்தான். ஆனாலும் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பாது என்று முடிவு செய்து; 'தில்லுக்கு துட்டு', 'ஏ1', 'தில்லுக்கு துட்டு 2', 'டகால்ட்டி', 'பாரிஸ் ஜெயராஜ்', 'டிக்கிலோனா', 'சபாபதி' என வரிசையாக நடித்துக்கொண்டே இருக்கிறார்.

Also Read
சினிமாவில் ரீ என்ட்ரி தரும் ஷாலினி.. அஜித் சொன்னதுக்கு ஓகே சொல்லிட்டாராம்.. செம கம்பேக்
சினிமாவில் ரீ என்ட்ரி தரும் ஷாலினி.. அஜித் சொன்னதுக்கு ஓகே சொல்லிட்டாராம்.. செம கம்பேக்

பெரிய வெற்றி இல்லை: ஹீரோவாக மாறி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடலாம் என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல் இல்லாமல் இந்தப் பயணம் அவருக்கு கொஞ்சம் கஷ்டமாகவே அமைந்திருக்கிறது. ஐந்து படங்கள் நடித்தால் அதில் ஒரு படம்தான் சுமாராவாவது ஹிட்டாகிறது. இருந்தாலும் மனம் தளராத சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக பயணம் செய்கிறார். கடைசியாக அவர் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம்கூட சுமார் ஹிட்தான்.

Recommended For You
விஜய்க்கு பாராட்டு விழா.. தயக்கமாக இருக்கிறது.. ஓபனாக சொன்ன பேரரசு.. நடக்குமா?
விஜய்க்கு பாராட்டு விழா.. தயக்கமாக இருக்கிறது.. ஓபனாக சொன்ன பேரரசு.. நடக்குமா?

அடுத்த படம்: எப்படியாவது ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக மூன்று படங்கள் வரவிருக்கின்றன. இவை தவிர்த்து சிம்பு ஹீரோவாக நடிக்கும் படத்தில் இவர் காமெடி நடிகராகவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தானம் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

சந்தானத்தின் பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "பள்ளியில் படிக்கும்போது நான் ரொம்ப அமர்க்களம் செய்வேன்.கடைசி இருக்கை மாணவ்ன் நான். ஒழுங்காக படிக்கமாட்டேன். எனவே ன்னை பழி வாங்க, ஆண்டு விழாவில் பாடல் போட்டியில் என்னுடைய பெயரையும் ஆசிரியர்கள் கொடுத்துவிட்டார்கள். நானோ முடியாது என்று சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை. என்னுடையை குரல் நன்றாக இருக்காது என்று தெரிந்தும் அப்படி செய்தார்கள்.

நான் செய்தது: அந்த விழாவுக்கு பெரிய பெரிய அதிகாரிகள் வந்திருந்தார்கள். நான் மேடைக்கு சென்று, தேசிய கீதம் பாடினேன். எல்லோரும் எழுந்து நின்றார்கள். பாடல் முடிந்தவுடன் உட்கார சென்றார்கள். மீண்டும் பாடினேன்; அவர்கள் எழுந்து நின்றார்கள். இப்படி மொத்தம் மூன்று முறை நடந்தது. வந்தவர்கள் எல்லோரும் டென்ஷன் ஆகிவிட்டார்கள். ஆசிரியர்கள் என்னை நைஸாக மேடையிலிருந்து அழைத்து சென்றுவிட்டார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X