சினிமாவில் ரீ என்ட்ரி தரும் ஷாலினி.. அஜித் சொன்னதுக்கு ஓகே சொல்லிட்டாராம்.. செம கம்பேக்

சென்னை: அஜித்குமாரும், ஷாலினியும் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தபோது காதலித்தார்கள். அவர்கள் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். மணமுடித்த பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷாலினி. குடும்பத்தை கவனித்துக்கொண்டு பொறுப்புள்ள தாயாக விளங்கிவருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது. இவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் இந்தத் தம்பதி நிம்மதியாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துவருகிறது.

Ajith Kumar s Wife Shalini Set for a Comeback Likely to Oversee AK s Next Film Production
Photo Credit:

எங்கேயும் ஷாலினி: அஜித் இப்போது நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அதற்கு ஷாலினி தன்னால் முடிந்த அத்தனை சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். பெரும்பாலும் அஜித் ரேஸுக்கு செல்வதற்கு முன்பு அருகே ஷாலினியும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தன் மனைவிக்கு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்த பிறகுதான் ஏகே வண்டி ரேஸில் சீறிப்பாயும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து பலரும், ஜோடினா இப்படித்தான் இருக்கணும் என பூரிப்பார்கள்.

Also Read
விஜய் படம் ரிலீஸா?.. எனக்கும் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வேண்டும்.. அஜித் கேட்டது தெரியுமா?
விஜய் படம் ரிலீஸா?.. எனக்கும் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வேண்டும்.. அஜித் கேட்டது தெரியுமா?

ட்ரெண்டாகும் வீடியோக்கள்: அதேபோல் அவர்கள் தொடர்பான பல வீடியோக்கள் ட்ரெண்டாகும். தனது காலில் ஷாலினி விழுந்த பிறகும், 'வீட்டுக்கு போனதும் நான் விழணும்' என அஜித் சொன்னது, வெளிநாட்டு வீதிகளில் இரண்டு பேரும் ஹாயாக நடந்து சென்றது, சமீபத்தில்கூட ஷாலினியை தூக்கி போஸ் கொடுத்தது என அவர்கள் தொடர்பான க்யூட் மொமண்ட்டுகளும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், இயல்பாகவும் இருக்கும். திருமணத்துக்கு பிறக ஒரு ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர்கள்தான் உதாரணம் என்பது ரசிகர்களின் கருத்து.

Recommended For You
G.D.N Second Single - இந்தியாவே எதிர்பார்க்கும் ஜி.டி.என்.. நாளை ரிலீஸாகும் இரண்டாவது சிங்கிள்
G.D.N Second Single - இந்தியாவே எதிர்பார்க்கும் ஜி.டி.என்.. நாளை ரிலீஸாகும் இரண்டாவது சிங்கிள்

அஜித்தின் அடுத்த படம்: இதற்கிடையே அஜித்தின் அடுத்த படம் பற்றிதான் அனைவரது கவனமும் இருக்கிறது. டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கும் அஜித்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவே இல்லை என தொடர்ந்து பேசப்பட்டது. இதனையடுத்து அஜித்தே படத்தை தயாரிப்பார் என்று சொல்லப்பட்டாது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் ரீ என்ட்ரி தரவிருக்கிறாராம்.

என்ன ரோல்?: அதாவது, தனது அடுத்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த அஜித்; நடிக்கவும் செய்வதால் முழு கவனத்தையும் தயாரிப்பு பணிகளில் செலுத்த முடியாது. அதன் காரணமாக தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துமாறு ஷாலினியிடம் ஏகே சொன்னதாகவும்; அதற்கு ஷாலினியும் ஓகே சொல்லிவிட்டது என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X