twitter
    X
    Home சினி தரவரிசை

    ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Sunday, December 11, 2022, 10:40 PM [IST]

    ரஜினி நடித்த தமிழ் படங்களில் அவரது சிறந்த திரைப்பட அறிமுக பாடல்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட குறிப்பிடப்படும் சில ரஜினியின் பாடல்கள் மட்டுமே இங்கு உள்ளது. இதுவரை ரஜினி நடித்துள்ள 170 திரைப்படங்களில் இவரது சிறந்த திரைப்படங்கள் மற்றும் அதனின் அறிமுக பாடல்களின் வீடியோ இங்கு உள்ளன.

    cover image

    படையப்பா

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் பாடலாசிரியர் வைரமுத்து பாடல் வரிகளில் உருவான திரைப்பாடல். 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் ரஜினியின் அறிமுக பாடலாக இடம் பெற்றுள்ள இந்த திரைப்பாடல் தமிழ் சினிமாவில் பிரமாண்ட புகழினை பெற்று பிரபலமாகியுள்ளது. இப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று ரஜினியின் திரைவாழ்வில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய பாடலாக அமைந்துள்ளது. இன்றும் இப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் மற்றும் வரவேற்புகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

    தர்பார்

    இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையில், பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் உருவான 2020-ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல். தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள இந்த திரைப்பாடல் ரஜினியின் அறிமுக பாடலாக 2020-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் திரைக்கதையை விட இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் பிரபலமானது.

    பேட்ட

    இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான சூப்பர் ஹிட் அதிரடி திரைப்படம், பேட்ட. இப்படமானது நடிகர் ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்காகவே திரைக்கதை எழுதி பிரபலமாகியுள்ளார். ரஜினியின் திரைப்படங்களில் இப்படம் மிக புகழ் பெற்ற படமாகும். இப்படத்தின் பின்னணி இசை யாரும் எதிர்பார்க்காத அளவில் பிரபலமாகி புகழ் பெற்றுள்ளது.

    பாட்ஷா

    இசையமைப்பாளர் தேவா இசையில், பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள திரைப்பாடல். இப்பாடல் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும். இப்படமானது ரஜினியின் திரைவாழ்வில் இவர் நடித்துள்ள ஒரு முக்கிய படமாகும். இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் ரஜினிக்கு இன்றும் ஒரு பெரிய புகழாக உள்ளது.

    அருணாச்சலம்

    1997-ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஒரு குடும்பத்திரைப்படம். இப்படத்தின் ரஜினியின் அறிமுக பாடலாக உள்ள "அதாண்டா இதாண்ட அருணாச்சலம் நாதாந்த" திரைப்பாடல் தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் பிரபலமானது. இப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளில், பாடகர் எஸ். பி. சுப்பிரமணியம் பாடியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.

    அண்ணாமலை

    இசையமைப்பாளர் தேவா இசையில் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய சூப்பர் ஹிட் பாடல். இப்பாடல் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றுள்ளது. இப்பாடலுக்குக்காக பல தரப்பில் இருந்து பல பாராட்டுகளை வென்றுள்ளனர் படக்குழுவினர். 

    முத்து

    இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியாகியுள்ள சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படத்தில் இடம் பெற்றுள்ள ரஜினியின் அறிமுக பாடல் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும். இப்பாடலை பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

    அடுத்த வாரிசு

    ரஜினியின் "அடுத்த வாரிசு" என்ற திரைப்படத்தில் அறிமுக பாடலாக உள்ள "ஆசை நூறுவகை" திரைப்பாடல் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல பாடலாகும். மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் மிக பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளது.

    வேலைக்காரன்

    நடிகர் ரஜினியின் வேலைக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "வேலை இல்லாதவன்தா வேலை தெருஞ்சத்தவன்தா" திரைப்பாடல் தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளது. இப்பாடல் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள புகழ் பெற்ற பாடலாகும்.

    எஜமான்

    ரஜினியின் எஜமான் படத்தில் இடம் பெற்றுள்ள "எஜமான் காலடி மண் எடுத்து" பாடல் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    சிவாஜி : தி பாஸ்

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷரியா சரண், விவேக் நடித்துள்ள அதிரடி திரைப்படம். தமிழ் சினிமாவில் மிக பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள இத்திரைப்படம், வசூல் மற்றும் விமர்சன சார்பில் பல வரவேற்புகளை பெற்று தமிழில் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ரஜினியின் அறிமுக பாடல் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் குரலில் வெளியாகி மிக பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளது.

    ராஜாதி ராஜா

    ரஜினியின் இரட்டை வேடத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள இப்படத்தில் ரஜினியின் அறிமுக பாடலான "மலையாள கரை ஓரம்" பாடல் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் புகழ் பெற்ற பாடலாகும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X