X
பேட்ட

பேட்ட

Action | 10 Jan 2019 | U/A |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

பேட்ட கதை

பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹ, திரிஷா, சிம்ரன், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். மேலும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.    கதையின் முன்னோட்டம் :     கல்லூரி விடுதியில் நிர்வாகியாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் காளி (ரஜினி) அதே கல்லூரியில் படிக்கும் மாணவன்தான்  பாபி சிம்ஹா, இவர்கற்குள் நடந்த மோதலால் காளியின் கடந்தகால வாழ்க்கை பாபி சிம்ஹாவிற்கு தெரிய வருகிறது.   காளி தன் எதிரிகளைத் தேடி கல்லுரியில் நிர்வாகியாகப் பணியாற்றிக்கொண்டு, எதிரிகளைப் பழிவாங்கும் படலம் பேட்ட படத்தின் கதை. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். கதை : ஊட்டி கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டும், கல்லூரியே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டும் அராஜகம் செய்கிறார் பாபி சிம்ஹா. அதே கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.  பிறகு,  பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள்.  பின்பு, தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் பேட்டையை விட்டுவிட்டு கல்லூரி வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? நவாசுதீன் கொல்ல நினைக்கும் சனத் ரெட்டி யார்? நவாசுதீன் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணி காரணம் என்ன? க்ளைமாக்ஸில் என்ன நடந்தது? என்பதே பேட்ட படத்தின் மீதிக்கதை.
Read More

பேட்ட நடிகர்கள் & படக்குழுவினர்

பேட்ட அணியின் தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பேட்ட விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
பழைய பகையை தீர்த்துக் கட்ட நாயகன் நிகழ்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் தான் கதையின் களம். ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், ரஜினி இதில் நடித்திருக்கும் போது ரசிக்க வைக்கிறது. முதல் பாதி முழுவதும் கொஞ்சம் முதுமை தெரிகிறது ரஜினி முகத்தில். ஆனால், அது காரணமாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இடைவேளையின் போது பிளாஷ்பேக் ஆரம்பமாகும்போது புரிகிறது. கபாலி மற்றும் காலாவில் ரஜினியை வயதான தோற்றத்தில் பார்த்து கவலைப்பட்ட ரசிகர்களுக்கு விருந்தாக, கலர்புல் காஸ்ட்யூமில் ரஜினி கலக்கியிருக்கிறார். மொத்தத்தில் ரஜினி படமாகவே வெளிவந்திருக்கிறது பேட்ட. பழைய ரஜினியைப் பார்க்க வேண்டும் என ஆவலாகக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஸ்டைலிஷான ரஜினியைக் காட்டி, எக்ஸ்ட்ரா புத்துணர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களை நிச்சயம் திருப்தி படுத்தும் இந்த 'பேட்ட' என்பதில் சந்தேகமே இல்லை.

பேட்ட பாடல்கள்

பேட்ட செய்திகள்

பேட்ட திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பேட்ட

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+