twitter
    X
    Home சினி தரவரிசை

    இந்திய சினிமாவின் உயர் விருதான 'தாதாசாகெப் பால்கே' விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, September 24, 2022, 02:58 PM [IST]

    இந்திய சினிமா உயர் விருதான 'தாதாசாகெப் பால்கே' விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளனர். தாதாசாகெப் பால்கே, என்பவர் இந்தியா திரைப்பட தயாரிப்பாளர்-இயக்குனர்-திரைக்கதை எழுத்தாளர் மற்றும் 'இந்திய சினிமாவின் தந்தை' என்னும் புகழ் கொண்டவர். இந்திய அரசு தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவாக, இந்தியா சினிமா துறையில் அதிக ஆற்றலுடன் பங்களிப்பு அளிக்கும் ஒரு நட்சத்திரத்தினை தேர்ந்தேடுத்து தாதாசாகெப் பால்கே விருதினை அளித்து கௌரவப்படுத்தப்படுகிறது. இந்த தாதாசாகெப் பால்கே விருது இந்திய சினிமா துறையில் மிக உயர்ந்த மதிப்புமிக்க விருது ஆகும். தாதாசாகெப் பால்கே விருதினை இந்திய தேசிய திரைப்பட விழாவின் இறுதியில் அறிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுகிறது. இந்த விருதில் ஸ்வர்ணா கமல் (தங்க தாமரை), பதக்கம், ஒரு சால்வை மற்றும் 1 கோடி ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும். இங்கே தமிழ் துறையைச் சேர்ந்த தாதாசாகெப் பால்கே விருது வென்றவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் எல்.வி.பிரசாத், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகியோர் உள்ளனர்.

    cover image
    எல். வி. பிரசாத் - 1982

    எல். வி. பிரசாத் - 1982

    1

    எல். வி. பிரசாத், ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழிலதிபர். அவர் இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார், மேலும் 1982 ஆம் ஆண்டில் இந்தியாவில் திரைப்படங்களுக்கான மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார்.

    1996

    1996

    2

    சிவாஜி கணேசன் மறைந்த முன்னாள் திரைப்பட நடிகர் ஆவார். அவர் தமிழில் இதுவரை 300க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல், ஒன்பது தெலுங்கு திரைப்படங்கள், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். 1952-ம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தன் முதல் திரைப்படத்திலேயே ...

    2010

    2010

    3

    கைலாசம் பாலச்சந்தர் தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர், மேடை அமைப்பாளர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.  திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் ஆகும்.

    2019

    2019

    4

    ரஜினிகாந்த், இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் பிரபலம் முக்கிய நபர்களில் ஒருவர் ஆவார். "சிவாஜி ராவ் கெய்க்வாட்" என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர், ரஜினிகாந்த் என்னும் திரைப்பெயர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பணியாற்றியுள்ளார். இவருக்கு இந்திய ரசிகர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X