X
முகப்பு சினி தரவரிசை

Garudan OTT: 2024 முதல் பிளாக்பஸ்டர் 'கருடன்' படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காண ரெடியா!

Author Sakthi Harinath | Updated: Tuesday, July 2, 2024, 01:55 PM [IST]

Garudan OTT: 2024 முதல் பிளாக்பஸ்டர் 'கருடன்' படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காண ரெடியா! - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் 2024 மே 31ல் வெளியாகி பிரமாண்ட வெற்றி படைத்த கருடன் படத்தின் ஓடிடி வெளியீட்டு பற்றிய முழு தகவல்கள் விரிவாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்ட கருடன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம் நிறுவனம் 2024 ஜூலை 3ல் ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிட்டுள்ளது. முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

கருடன் - கருடன்

கருடன் -  இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Video Thumbnail

கருடன் - கருடன் - கதை

தேனி மாவட்டம் கோம்பை என்னும் கிராமத்தில் உயிர் நண்பர்களாக வளர்கின்றனர், ஆதி (சசிகுமார்) & கர்ணா (உன்னி முகுந்தன்). இவர்கள் இணைந்து செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றனர். கோம்பையில் உள்ள ஒரு அம்மன் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதி ஆர் வி உதயகுமார் (சின்ன கவுண்டர் பட இயக்குனர்), மைம் கோபி மற்றும் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி உதவியுடன் தனது திட்டத்தை நகர்த்துகிறார்.


கோவில் பற்றிய அணைந்து பத்திர சான்றிதழ் முழுவதையும் வடிவுக்கரசி குடும்பம் பராமரித்து வருகிறது. இப்படத்தின் நாயகன் சூரி 'சொக்கன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


கர்ணன் (உன்னி முகுந்தன்) சிறுவயதில் ஒரு ஆபத்தில் இருந்து சூரி காப்பாற்ற, அந்த நொடி முதல் சூரி கர்ணனின் நண்பனாகவும், பாதுகாவலனாக மாறுகிறார். மிகுந்த விஸ்வாசத்துடன் இருக்கும் சூரி, கர்ணன்யை பல திசைகளில் இருந்து பாதுகாத்து வருகிறார்.


காலபோக்கில் சூரி - சசி குமார் - உன்னி முகுந்தன் மூவரும் நண்பர்களாக மாறுகின்றனர். இவர்களை தாண்டி கோவில் நிலத்தை அபகரிக்க முடியாமல் இருக்கும் அரசியல்வாதி, சூழ்ச்சி செய்து உன்னி முகுந்தன் - சசி குமார் இடையே இருக்கும் நட்பை உடைக்க திட்டமிட்டு, நண்பர்களை எதிரிகளாக மாற்றுகின்றார்.


தனது மனைவி தூண்டுததால் நண்பன் துரோகியாக மாறுகிறார், உன்னி முகுந்தன். இவர் செய்யும் தவறுகளுக்கு சூரி என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை.


தவறென அறிந்தும் உன்னி முகுந்தன் பக்கம் நின்றாரா? சூரி. இல்லை உன்னி முகுந்தனை எதிர்த்து நிற்கிறாரா? என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.


Video Thumbnail

கருடன் - கருடன் - விமர்சனம் & ரேட்டிங்

கருடன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழக பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஒரு இக்கட்டான சூழலில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ரசிகர்களால் பெரிய அளவில் பிரபலமானது, கருடன். இப்படத்திற்கு சராசரியாக ரசிகர்கள் மத்தியில் (3.5/5) ரேட்டிங் அளிக்கப்பட்டுள்ளது.


Video Thumbnail

அமேசான் பிரைம் - அமேசான் பிரைம்

2024 மே 31ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியான கருடன் திரைப்படம், தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. கருடன் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமையை கைப்பற்றிய 'அமேசான் பிரைம் வீடியோ' நிறுவனம் இப்படத்தினை 2024 ஜூலை 3ல் வெளியிட திட்டமிட்டு, ஸ்ட்ரீமிங் செய்துள்ளது.


கருடன் படத்தினை டெண்ட்கோட்ட & சிம்ப்ளி சவுத் டிஜிட்டல் நிறுவனங்கள் கைப்பற்றி கருடன் படத்தின் ஓவர்சீஸ் இடங்களில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. இப்படம் ஜூலை 3, 2024ல் டிஜிட்டலில் வெளியாகியுள்ளது.

Video Thumbnail

நாயகன் சூரி - கதை நாயகன் சூரி

தமிழ் சினிமாவில் சிறிது கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி, நகைச்சுவையாளராக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்று தமிழ் சினிமாவில் கலக்கி வந்துள்ளார். 2023ல் வெளியான விடுதலை - பார்ட் 1 திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை ஒரு நாயகனாக அறிமுகப்படுத்தி பலர் மத்தியில் பிரபலமாக்கியுள்ளார். திரைப்படங்களின் நாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து வருகிறார், நடிகர் சூரி. விடுதலை படத்தினை தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படமான கருடன் படமும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து ஹிட் படமாக ஜொலித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+