X
முகப்பு சினி தரவரிசை

கல்கி 2898 AD (பார்ட் 2) - எப்போ ரிலீஸ் தெரியுமா?, தயாரிப்பு பணிகள் தீவிரம்...

Author Sakthi Harinath | Published: Saturday, June 29, 2024, 04:48 PM [IST]

கல்கி 2898 AD (பார்ட் 2) - எப்போ ரிலீஸ் தெரியுமா?, தயாரிப்பு பணிகள் தீவிரம்... - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் சமீபத்தில் இந்திய சினிமாவில் வெளியாகி பெரிய அளவில் பிரமிக்கவைத்த கல்கி 2898 AD திரைப்படத்தின் பார்ட் 2 ரிலீஸ் தேதி மற்றும் படப்பிடிப்பு தகவல்கள் பற்றிய முழு விவரங்கள் உள்ளது. முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

கல்கி 2898 AD - கல்கி 2898 AD

கல்கி 2898 AD - இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் என இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அஸ்வனி தட் தனது வியஜயந்தி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


அதிரடி - திரில்லர் திரைக்கதையில் ஒரு சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள கல்கி படத்திற்கு படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான AA பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து விநியோகம் செய்துள்ளது.


600 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 27ல் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னட, மலையாளம் என பல மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

Video Thumbnail

கல்கி 2898 AD - கல்கி 2898 AD - கதை

கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை மஹாபாரதம் போரில் தொடங்குகிறது. குருச்சேத்திர போர் முடிவில் கிருஷ்ணனிடம் சாகாவரம் மற்றும் சாபத்தை பெற்ற அஸ்வத்தாமன் கலியுகம் முழுவதும் வாழ்ந்து கிருஷ்ணனின் 10வது அவதாரத்திற்காக காத்திருக்கிறார்.


2898 ஆண்டுகளில் இந்தியாவில் எஞ்சிய நகரமான காசியில் கமல் ஹாசன் (யாஸ்கின்) என்று தன்னை கடவுளாக சித்தரித்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு முக்கோண பிரிமைட்-யை தலைகீழாக வைத்து இயற்கையை மறைத்து வைத்துள்ளார். மன்னர் கால ஆட்சி போல மனிதர்கள் வாழும் நிலையில், மனிதர்கள் காசிற்கு பதில் யூனிட் போன்ற மின்சார சார்ந்த அறிவியலை பயன்படுத்தி வருகின்றனர்.


ஒரு பவுண்டி வீரராக இருக்கும் பிரபாஸ், காம்ப்ளெக்ஸ் என்னும் இடத்திற்கு போக விரும்புகிறார். இதற்காக கடினமாக உழைத்து வரும் இவர், பல சண்டைகள் மற்றும் திருட்டு என பல விஷயங்கள் செய்து வாழ்ந்து வருகிறார்.


நடிகர் தீபிகா படுகோன் காம்ப்ளெக்ஸ் இடத்தில் இருந்து தப்பி வருகிறார். 5 மாத குழந்தையை சுமக்கும் இவர், அங்கிருந்து தப்பித்த இவரை காப்பாற்றி நடிகர் பசுபதி சம்பா என்ற இடத்திற்கு அழைத்து வருகிறார். இடையில் தீபிகா படுகோன்யை பிடித்து கொடுத்தால் காம்ப்ளெக்ஸ் இடத்திற்கு செல்ல முடியும் என நினைத்து பிரபாஸ் அவரை பிடிக்கும் முயற்சியில் துரத்துகிறார்.


குருச்சேத்திர போர் முடிவில்கங்கை நதி முற்றிலுமாக வத்தி போனதும், உனது ரத்னம் கல் ஜொலிக்கும் என கிருஷ்ணன் அஸ்வத்தமானமிடம் சொன்ன வார்த்தைகள் உண்மையானதும், அஸ்வத்தாமன் கல்கி அவதாரம் வரப்போகிறது என உணர்கிறார். இதற்காக தீபிகா படுகோன்யை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார், அஸ்வத்தாமன்.


அஸ்வத்தாமன் உடன் மோதி தோற்கடிக்க படும் பிரபாஸ், அஸ்வத்தாமன் சென்ற இடத்திற்கு ஒருவரை ஏமாற்றி சூழ்ச்சி செய்து போகிறார். பின் அங்கு மீண்டும் யுத்தம் தொடங்குகிறது. தீபிகா படுகோன்யை காப்பற்ற அஸ்வத்தாமன் முயற்சித்தும், எதிரிகள் தீபிகாவை கடத்துகின்றனர். அஸ்வத்தாமன் கையில் இருக்கும் கோல் விஜய தனுஷ் ஆகும். 


விஜய தனுஷை தொட்டதும் பிரபாஸ் மஹாபாரத கர்ணனாக மாறுகிறார். பின் பிரபாஸ் அங்கிருந்து தீபிகாவுடன் தப்பி செல்கிறார். இதற்கிடையில் இப்படத்தின் வில்லனான கமல் ஹாசன் மீண்டும் பலம் உடையவராக எழுந்து தீபிகாவை அழித்து கிருஷ்ணனின் கல்கி அவதாரத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதுடன் கல்கி முதல் பாகம் முடிவுக்கு வந்துள்ளது.


Video Thumbnail

கல்கி - பிளாக்பஸ்டர் - கல்கி - பிளாக்பஸ்டர்

கல்கி 2898 Ad திரைப்படம் 2024 ஜூன் 27ல் உலகமெங்கும் பல மொழியில் டப்பிங் மூலம் வெளியாகி பலர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாக இப்படம் ரிலீஸான முதல் நாளில் 200 கோடிகளை நெருங்கியுள்ளது. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் கௌரவ தோற்றத்தில் நடிக்க, பல ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக பல மனங்களை வென்று இந்த ஆண்டு வெற்றி படங்களில் ஒன்றாக வாகை சூடியுள்ளது.


Video Thumbnail

கல்கி - பார்ட் 2 - கல்கி - பார்ட் 2

கல்கி திரைப்படம் ஒரு இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புகளுடன் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் பிரபாஸ் தான் மகாபாரதத்தின் கர்ணன் என்னும் திருப்புமுனை உடன் முடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளனர், கல்கி படக்குழுவினர்.


Video Thumbnail

கல்கி 2898 AD - கல்கி 2 - ரிலீஸ்

கல்கி திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் கதையை முடிவெடுத்து 50 % படப்பிடிப்பை முடித்துள்ளனர், படக்குழுவினர். இனி கல்கி 2 திரைப்படத்தின் அதிரடி காட்சிகள் மற்றும் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட வேண்டும் என சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது கல்கி படத்தின் இரண்டாம் பாகம் 2025 ஆம் ஆண்டில் வெளியிட இப்படத்தின் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+