X
முகப்பு சினி தரவரிசை

Indian2 OTT: தாத்தா வராரு கதறவிட போறாரு... 'இந்தியன் 2' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Author Sakthi Harinath | Published: Thursday, August 1, 2024, 04:45 PM [IST]

Indian2 OTT: தாத்தா வராரு கதறவிட போறாரு... 'இந்தியன் 2' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் உள்ளன. இந்தியன் 2 திரைப்பட ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது படத்தின் ரிலீஸ் பற்றி அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

இந்தியன் 2 - இந்தியன் 2

இந்தியன் 2 - 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன்  திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இயக்குனர் ஷங்கர் ஷண்முகம் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - கிரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


அதிரடி திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் கமல் ஹாசன் நாயகனாக நடிக்க சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், நெடுமுனி வேணு, விவேக், மனோ பாலா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படத்தினை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படமும் உருவாகி உள்ளது.


லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதியான திரு. உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்று இப்படத்தினை தயாரிப்பு நிறுவனம் தானே உலகம் முழுவதும் விநோயோகம் செய்துள்ளது.


Video Thumbnail

இந்தியன் 2 - இந்தியன் 2 - கதை

தமிழகத்தில் படித்து வேலை இல்லாமல் இருக்கக்கூடிய பல கோடி இளைஞர்கள் மத்தியில் ஒருவராக இருக்கும் சித்தார்த், இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராட முடிவு எடுக்கிறார். இதற்காக ஒரு சமூக ஆர்வம் கொண்ட சிலரை சேர்த்து ஒரு குழு அமைத்து போராடி வருகிறார். தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பல பதிவுகள் மூலம் பலரின் அறிமுகத்திற்கு வரும் சித்தார்த் குடும்பம் மற்றும் சமூகம் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.


ஒரு கட்டத்தில் ஊழலில் இருந்து தப்ப முடியாமல் இருக்கும் சித்தார்த், இந்தியன் என்னும் சேனாதிபதி (கமல் ஹாசன்) பற்றிய விவரங்களை அறிகிறார். பின் இந்த ஊழலை தடுக்க மீண்டும் இந்தியன் வர வேண்டும் என பல முயற்சிகள் எடுத்து சேனாதிபதியை மீண்டும் இந்தியா வரவழைத்து பல ஊழல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தை ஏமாற்றும் துரோகிகளை தண்டிப்பதே இப்படத்தின் கதைக்கரு.


Video Thumbnail

வரவேற்பு - வரவேற்பு

இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் சினிமாவில் தோல்வியை சந்தித்துள்ளது. பெரிய ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம்பிடிக்காமல் தோல்வி அடைந்து வருகிறது. 


Video Thumbnail

தோல்வி - தோல்வி

இந்தியன் 2 திரைப்படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் தோல்வி அடைந்துளளது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்களின் வரவேற்பை ஈர்க்க தவறியுள்ளது, இந்தியன் 2. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தின் மூன்றாம் பாக திரைப்படம் உருவாகி வரும் நிலையில், விரைவில் இந்தியன் 3 படத்தின் அறிவிப்புகள் வெளியாக உள்ளது.


Video Thumbnail

ஓடிடி - ஓடிடி

250 கொடிகளுக்கு உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் ஓடிடி வெளியீடு குறித்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ள 'நெட்ப்ளிக்ஸ்' நிறுவனம் இப்படத்தினை 2024 ஆகஸ்ட் 9ல் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் 2 ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+