இந்தியன் 2 கதை
இந்தியன் 2 - 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இயக்குனர் ஷங்கர் ஷண்முகம் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - கிரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிரடி திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் கமல் ஹாசன் நாயகனாக நடிக்க சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், நெடுமுனி வேணு, விவேக், மனோ பாலா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படத்தினை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படமும் உருவாகி உள்ளது. லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதியான திரு. உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்று இப்படத்தினை தயாரிப்பு நிறுவனம் தானே உலகம் முழுவதும் விநோயோகம் செய்துள்ளது. 250 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் 2024 ஜூலை 12ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை ' நெட்ப்ளிக்ஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தினை 200 கோடி செலவில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் படக்குழு / திரை நட்சத்திரங்கள் இந்தியன் 2 திரைப்படத்தின் வீடியோக்கள் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை தமிழகத்தில் படித்து வேலை இல்லாமல் இருக்கக்கூடிய பல கோடி இளைஞர்கள் மத்தியில் ஒருவராக இருக்கும் சித்தார்த், இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராட முடிவு எடுக்கிறார். இதற்காக ஒரு சமூக ஆர்வம் கொண்ட சிலரை சேர்த்து ஒரு குழு அமைத்து போராடி வருகிறார். தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பல பதிவுகள் மூலம் பலரின் அறிமுகத்திற்கு வரும் சித்தார்த் குடும்பம் மற்றும் சமூகம் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ஒரு கட்டத்தில் ஊழலில் இருந்து தப்ப முடியாமல் இருக்கும் சித்தார்த், இந்தியன் என்னும் சேனாதிபதி (கமல் ஹாசன்) பற்றிய விவரங்களை அறிகிறார். பின் இந்த ஊழலை தடுக்க மீண்டும் இந்தியன் வர வேண்டும் என பல முயற்சிகள் எடுத்து சேனாதிபதியை மீண்டும் இந்தியா வரவழைத்து பல ஊழல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தை ஏமாற்றும் துரோகிகளை தண்டிப்பதே இப்படத்தின் கதைக்கரு. இந்தியன் 2 திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் 2019 ஜனவரி-18 முதல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்துள்ளது. பின் இப்படமானது முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையாக இருப்பதினால் பல காட்சிகள் 1996ஆம் ஆண்டின் இந்தியன் பட காட்சிகளை ஒப்பிட்டு படமாக்கியுள்ளனர், படக்குழுவினர். இந்தியன் 2 படம் தான் இப்படத்தின் நாயகன் கமல் ஹாசனின் இறுதி படமாக இருக்கக்கூடம் என தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, பின்னர் கமல் ஹாசன் சினிமா மற்றும் அரசியல் என இரு துறைகளிலும் பணியாற்ற போவதாக அறிவித்துள்ளார். கமலின் வயதான தோற்றத்தை கடந்த 2019 ஜனவரி மாதம் வெளியிட்டு சென்னையில் படப்பிடிப்பை தொடங்கினர் ஷங்கர். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு கமலின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என்று கமலின் வயதான தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியள்ளார், இயக்குனர் ஷங்கர். மீண்டும் மீண்டும் ரீ-சூட் என இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் எகிற, இப்படம் கைவிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பின்பு லைக்கா படக்குழுவினர், இச்செய்திகள் ஆதாரமற்றது என்று முற்றுப்புள்ளி வைத்து, சென்னையில் ஜெனரல் மருத்துவமனை அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் படப்பிடிப்புகள் நடந்த நிலையில், ஸ்டூடியோ மற்றும் பல அரங்குகள் அமைக்க பட்டிருக்கின்றன என்ற தகவல்களை லைக்கா நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இந்தியன் 2 திரைப்படத்தினை நிறுத்தியுள்ளார் படக்குழுவினர். மே மாதம் 23-ம் நாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறியுள்ளனர் படக்குழுவினர். சிலம்பரசன் அதிரடி நீக்கம் இப்படத்தில் சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவருக்கு தான் ராகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து 2019- ஜூலை மாதம் இத்திரைப்படத்தில் நடிக்கவிருந்த நடிகர்கள் சிலரை மாற்றி இத்திரைப்படம் 2019 - ஆகஸ்ட் 19-ல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆகஸ்ட் தொடக்கத்திலையே தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சமூகவலைத்தள பக்கங்களில் சூட்டிங்கில் இருந்து ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
Read More