X
முகப்பு » பிரபலங்கள் » நிதி அகர்வால்
நிதி அகர்வால்

நிதி அகர்வால்

Actress
பயோடேட்டா:  நிதி அகர்வால் , மாடெல்லிங் துறையில் பணியாற்றும் பிரபல வடிவழகி , திரைப்பட நடிகை மற்றும் நடனமாடுபவர் ஆவார் . ஹிந்தி திரைப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் , பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார் . தெலுங்கு திரைப்படத்தில் இவர் பெற்ற பிரபலத்தினை தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படத்தில் 2020 ம் ஆண்டு நாயகியாக அறிமுகமாகியுள்ளார் .   நடிகர் ஜெயம் ரவியின் 25 வது படமான ' பூமி ' படத்தில் நாயகியாக நடித்து இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் . இப்படத்திற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் வெளியான ' ஷ் மார்ட் ஷங்கர் ' படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானவர் . தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்ற இவர் தற்போது கன்னடம் , மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார் .   நிதி அகர்வால் தமிழில் நடித்த திரைப்படங்கள் நிதி அகர்வால் அழகிய புகைப்படங்களுக்கு பிறப்பு நிதி அகர்வால் ஹிந்தி பேசக்கூடிய ஒரு அகர்வால் குடும்பத்தை சேர்ந்தவர் . இவர் ஹைதராபாத் மாநிலத்தை பிறப்பிடமாய் கொண்டவர் . கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரத்தில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ள இவர் எளிதாக பேசும் அளவிற்கு ஹிந்தி , தெலுங்கு , கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளை கற்று அறிந்தவர் . இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்துள்ளார் .   சிறுவயதில் இருந்து நடன கலையில் ஆர்வம் கொண்டுள்ள இவர் , பெல்லி டான்ஸ் , பல்லெட் , கதக் போன்ற நடன கலைகளை நன்கு கற்றறிந்துள்ளார் .   திரைப்பயணம் 2016 ம் ஆண்டு நடந்த ஒரு திரைப்பட தகுதி சுற்றில் 300 மேல் போட்டியாளர்களுடன் கலந்து கொண்ட நிதி அகர்வால் அந்த சுற்றில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் . அந்த போட்டியின் முடிவில் இவர் 2017 ம் ஆண்டு ஹிந்தி திரையில் வெளியான ' முன்ன மைக்கெல் ' படத்தில் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து ஹிந்தி திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் .   இப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அணைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் பின்னர் 2018 ம் ஆண்டு ' சவ்யாச்சி ' என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளார் . இப்படத்தினை தொடர்ந்து இவர் மிஸ்டர் . மஞ்சு , ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கிய நடிகையாக சித்தரிக்கப்பட்டார் .   நிதி அகர்வால் , தனது நேர்த்தியான நடிப்பு மற்றும் உடல் அமைப்பை கொண்டு சுலபமாக தெலுங்கு மற்றும் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்து இவர் , அடுத்தடுத்து தமிழ் , தெலுங்கு , மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இந்திய திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார் .   இவர் தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நடிகரான ஜெயம் ரவி நடித்த ' பூமி ' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் . இப்படம் ஜெயம் ரவியின் 25 வது படம் என்பதால் தமிழ் மக்கள் இடையே மிக பிரபலமான திரைப்படமாகும் . இத்திரைப்படத்தில் நடித்து அனைவராலும் கண்டறியப்பட்டு தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார் .
மேலும் படிக்க

நிதி அகர்வால் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ராதா கிருஷ்ணா ஜகர்லமுடி Jul 2026
மகிழ் திருமேனி 18 Nov 2022
as Actress
லக்ஷ்மன் 14 Jan 2021
சுசீந்திரன் 14 Jan 2021

நிதி அகர்வால்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நிதி அகர்வால்

பெயர் நிதி அகர்வால்
பிறந்த தேதி 17 Aug 1993
வயது 33
பிறந்த இடம் Hydrabad
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நிதி அகர்வால் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

நிதி அகர்வால் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+