X
ஈஸ்வரன்

ஈஸ்வரன்

Drama | 14 Jan 2021 | U | 125 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஈஸ்வரன் கதை

ஈஸ்வரன் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால் என திரைப்பட நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் இணைந்து முதற்கட்ட படப்பிடிப்பினை "பர்ஸ்ட் காபி ப்ரொடக்ஷன்" அடிப்படையில் தயாரித்து, பின்னர் இப்படத்தினை தயாரிப்பாளர் பாலாஜி, துரை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் தொடங்கியுள்ளது. இப்படமானது கிராமத்து கதைக்களத்தை கொண்டுள்ள படமாகும். ஒரே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவுபெற்று இப்படம் 2021 பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்துள்ளது. அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா மற்றும் டி கம்பெனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தினை 7ஜி பிலிம்ஸ் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. படக்குழு :  இப்படத்தில் பணியாற்றிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய புகைப்படங்கள் :  ஈஸ்வரன் திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு வீடியோக்கள் :  ஈஸ்வரன் படத்தின் டீஸர், ட்ரைலர் மற்றும் பாடல்களின் வீடியோ தொகுப்பு ஈஸ்வரன் திரைப்படத்தின் கதை கதைக்கரு : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் பெரியசாமி (பாரதி ராஜா) சில காரணங்களால் தனது குடும்பத்தை அழிக்க நினைக்கும் பகைவனை கண்டு அஞ்சுகிறார். இந்த குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து பெரியசாமியின் மகன் ஈஸ்வரன் (சிலம்பரசன்) காப்பாற்ற போராடுகிறார். ஈஸ்வரன் திரைப்படம் பற்றிய பிரத்யேக தகவல்கள் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ் நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பினை தொடங்கிய படக்குழு 22 நாட்களில் இப்படத்தினை முழுவதுமாக இயக்கி படப்பிடிப்பினை முடித்துள்ளனர். தியேட்டர் பணி நிறுத்தம், ஊரடங்கு என பல பிரச்சனைகளில் பல வியாபாரங்கள் முடங்கி கொண்டிருந்த நிலையில், இப்படத்தினை சாதுரியமாக படப்பிடிப்பினை முடித்து, வெளியீட்டுக்கு தயாராகி 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணன் என திரையுலக முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இப்படம், தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. உடல் பருமன் காரணமாக தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் விமர்சிக்கப்பட்டு, பல படவாய்ப்புகளை இழந்த வந்த சிலம்பரசன், தனது எடையை குறைத்து மீண்டும் தனது பயணத்தை முதலிருந்து இப்படத்தின் மூலம் தொடங்கியுள்ளார்.  சிலம்பரசன் நடிப்பில் பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், ஈஸ்வரன் படத்தினை நடித்து முடித்து வெளியிட்டுள்ளார் சிலம்பரசன்.
Read More

ஈஸ்வரன் நடிகர்கள் & படக்குழுவினர்

ஈஸ்வரன் அணியின் தகவல்

இயக்குனர் சுசீந்திரன்
ஒளிப்பதிவாளர் திரு
தொகுப்பாளர் ஆண்டனி
இசை எஸ் தமன்
தயாரிப்பாளர் சிலம்பரசன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஈஸ்வரன் விமர்சகர்களின் விமர்சனம்

சமயம் தமிழ்
amil Newstamil Cinemamovie Newssimbu Starrer Eeswaran Twitter Review பொங்கல் வின்னர், பிளாக்பஸ்டர், மாஸ் கம்பேக்: ஈஸ்வரன்
சினி உலகம்
மொத்தத்தில் பொங்கல் நாள் அன்று ஈஸ்வரன் ஆண்டியுள்ள இந்த ஆட்டம் குடும்ப ரசிகர்கள் பார்த்து மகிழலாம்..
பிஹைண்ட் வுட்ஸ்
துள்ளலுடன் வின்டேஜ் சிம்பு, ஈஸ்வரனின் ஒரே பலம்!!
மாலை மலர்
மொத்தத்தில் ஈஸ்வரன் சாதாரணமானவன்.
சினி டைம்
‘ஈஸ்வரன்’ சிம்புவின் அபார நடிப்பும், தமனின் பின்னணி இசையும் படத்தை தூக்கிப் பிடிக்கிறது.

ஈஸ்வரன் ட்ரெய்லர்

Video Thumbnail

ஈஸ்வரன் பாடல்கள்

Music Director: எஸ் தமன்

ஈஸ்வரன் செய்திகள்

ஈஸ்வரன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஈஸ்வரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+