X
ஈஸ்வரன்
Drama | 14 Jan 2021 | U | 125 Mins
Tamil

ஈஸ்வரன் கதை

ஈஸ்வரன் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால் என திரைப்பட நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் இணைந்து முதற்கட்ட படப்பிடிப்பினை "பர்ஸ்ட் காபி ப்ரொடக்ஷன்" அடிப்படையில் தயாரித்து, பின்னர் இப்படத்தினை தயாரிப்பாளர் பாலாஜி, துரை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் தொடங்கியுள்ளது. இப்படமானது கிராமத்து கதைக்களத்தை கொண்டுள்ள படமாகும். ஒரே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவுபெற்று இப்படம் 2021 பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்துள்ளது.

அதிரடி மற்றும் குடும்பத்திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா மற்றும் டி கம்பெனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தினை 7ஜி பிலிம்ஸ் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.




ஈஸ்வரன் திரைப்படத்தின் கதை

கதைக்கரு: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் பெரியசாமி (பாரதி ராஜா) சில காரணங்களால் தனது குடும்பத்தை அழிக்க நினைக்கும் பகைவனை கண்டு அஞ்சுகிறார். இந்த குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து பெரியசாமியின் மகன் ஈஸ்வரன் (சிலம்பரசன்) காப்பாற்ற போராடுகிறார்.

ஈஸ்வரன் திரைப்படம் பற்றிய பிரத்யேக தகவல்கள்

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ் நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பினை தொடங்கிய படக்குழு 22 நாட்களில் இப்படத்தினை முழுவதுமாக இயக்கி படப்பிடிப்பினை முடித்துள்ளனர்.

தியேட்டர் பணி நிறுத்தம், ஊரடங்கு என பல பிரச்சனைகளில் பல வியாபாரங்கள் முடங்கி கொண்டிருந்த நிலையில், இப்படத்தினை சாதுரியமாக படப்பிடிப்பினை முடித்து, வெளியீட்டுக்கு தயாராகி 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணன் என திரையுலக முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இப்படம், தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.

உடல் பருமன் காரணமாக தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் விமர்சிக்கப்பட்டு, பல படவாய்ப்புகளை இழந்த வந்த சிலம்பரசன், தனது எடையை குறைத்து மீண்டும் தனது பயணத்தை முதலிருந்து இப்படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். 

சிலம்பரசன் நடிப்பில் பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், ஈஸ்வரன் படத்தினை நடித்து முடித்து வெளியிட்டுள்ளார் சிலம்பரசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+