Tamil » Movies » Indian 2 » Story

இந்தியன் 2

(2021)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

15 Nov 2021
கதை
இந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.

ஜனவரி 18 முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும் இத்திரைப்படத்தினை முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இயக்கவுள்ளார் இயக்குனர் ஷங்கர். இத்திரைப்படத்தினை நடித்ததும் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கமல் ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார், ஆகையால் இந்தியன் 2 கமலின் கடைசி படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவருக்கு தான் காஜல் ஜோடி என கூறப்படுகிறது. இவர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரத்திற்காக அஜய் தேவ்கன், பின்னர் அக்‌ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மறுக்கவே அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம்.

கமலின் வயதான தோற்றத்தை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு சென்னையில் படப்பிடிப்பை தொடங்கினர் ஷங்கர். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு கமலின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என்று கமலின் வயதான தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. 

இதனை மறுத்த லைக்கா படக்குழுவினர், இச்செய்திகள் ஆதாரமற்றது என்று முற்றுப்புள்ளி வைத்து, சென்னையில் ஜெனரல் மருத்துவமனை அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் படப்பிடிப்புகள் நடந்த நிலையில், ஸ்டூடியோ மற்றும் பல அரங்குகள் அமைக்க பட்டிருக்கின்றன என்ற தகவல்களை லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் இவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கமல்ஹாசனும் போட்டியிட உள்ளார். இதனால் இந்தியன் 2 திரைப்படத்தினை நிறுத்தியுள்ளார் படக்குழுவினர். 

மே மாதம் 23-ம் நாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன் பிறகே கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more