X
முகப்பு சினி தரவரிசை

Kalki OTT: ஒரே நேரத்தில் இரு ஓடிடி தளத்தில் வெளியானது 'கல்கி 2898 ஏடி'... கண்டு ரசிக்க ரெடியா!

Author Sakthi Harinath | Published: Thursday, August 22, 2024, 01:56 PM [IST]

Kalki OTT: ஒரே நேரத்தில் இரு ஓடிடி தளத்தில் வெளியானது 'கல்கி 2898 ஏடி'... கண்டு ரசிக்க ரெடியா! - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் சமீபத்தில் இந்திய சினிமாவில் வெளியாகி 1000 கோடிகள் வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக கொண்டாடப்பட்ட 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்புகள் இங்கு உள்ளது. கல்கி படம் ஒரே நேரத்தில் அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் என இரண்டு ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது. முழு விவரங்கள் இதோ.


cover image
Video Thumbnail

கல்கி 2898 AD - கல்கி 2898 ஏடி

கல்கி 2898 AD - இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் என இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அஸ்வனி தட் தனது வியஜயந்தி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


அதிரடி - திரில்லர் திரைக்கதையில் ஒரு சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள கல்கி படத்திற்கு படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான AA பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து விநியோகம் செய்துள்ளது.


600 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 27ல் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னட, மலையாளம் என பல மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.


Video Thumbnail

கல்கி 2898 AD - கல்கி 2898 ஏடி - கதை

கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை மஹாபாரதம் போரில் தொடங்குகிறது. குருச்சேத்திர போர் முடிவில் கிருஷ்ணனிடம் சாகாவரம் மற்றும் சாபத்தை பெற்ற அஸ்வத்தாமன் கலியுகம் முழுவதும் வாழ்ந்து கிருஷ்ணனின் 10வது அவதாரத்திற்காக காத்திருக்கிறார்.


2898 ஆண்டுகளில் இந்தியாவில் எஞ்சிய நகரமான காசியில் கமல் ஹாசன் (யாஸ்கின்) என்று தன்னை கடவுளாக சித்தரித்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு முக்கோண பிரிமைட்-யை தலைகீழாக வைத்து இயற்கையை மறைத்து வைத்துள்ளார். மன்னர் கால ஆட்சி போல மனிதர்கள் வாழும் நிலையில், மனிதர்கள் காசிற்கு பதில் யூனிட் போன்ற மின்சார சார்ந்த அறிவியலை பயன்படுத்தி வருகின்றனர்.


ஒரு பவுண்டி வீரராக இருக்கும் பிரபாஸ், காம்ப்ளெக்ஸ் என்னும் இடத்திற்கு போக விரும்புகிறார். இதற்காக கடினமாக உழைத்து வரும் இவர், பல சண்டைகள் மற்றும் திருட்டு என பல விஷயங்கள் செய்து வாழ்ந்து வருகிறார்.


நடிகர் தீபிகா படுகோன் காம்ப்ளெக்ஸ் இடத்தில் இருந்து தப்பி வருகிறார். 5 மாத குழந்தையை சுமக்கும் இவர், அங்கிருந்து தப்பித்த இவரை காப்பாற்றி நடிகர் பசுபதி சம்பா என்ற இடத்திற்கு அழைத்து வருகிறார். இடையில் தீபிகா படுகோன்யை பிடித்து கொடுத்தால் காம்ப்ளெக்ஸ் இடத்திற்கு செல்ல முடியும் என நினைத்து பிரபாஸ் அவரை பிடிக்கும் முயற்சியில் துரத்துகிறார்.


குருச்சேத்திர போர் முடிவில்கங்கை நதி முற்றிலுமாக வத்தி போனதும், உனது ரத்னம் கல் ஜொலிக்கும் என கிருஷ்ணன் அஸ்வத்தமானமிடம் சொன்ன வார்த்தைகள் உண்மையானதும், அஸ்வத்தாமன் கல்கி அவதாரம் வரப்போகிறது என உணர்கிறார். இதற்காக தீபிகா படுகோன்யை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார், அஸ்வத்தாமன்.


அஸ்வத்தாமன் உடன் மோதி தோற்கடிக்க படும் பிரபாஸ், அஸ்வத்தாமன் சென்ற இடத்திற்கு ஒருவரை ஏமாற்றி சூழ்ச்சி செய்து போகிறார். பின் அங்கு மீண்டும் யுத்தம் தொடங்குகிறது. தீபிகா படுகோன்யை காப்பற்ற அஸ்வத்தாமன் முயற்சித்தும், எதிரிகள் தீபிகாவை கடத்துகின்றனர். அஸ்வத்தாமன் கையில் இருக்கும் கோல் விஜய தனுஷ் ஆகும். 


விஜய தனுஷை தொட்டதும் பிரபாஸ் மஹாபாரத கர்ணனாக மாறுகிறார். பின் பிரபாஸ் அங்கிருந்து தீபிகாவுடன் தப்பி செல்கிறார். இதற்கிடையில் இப்படத்தின் வில்லனான கமல் ஹாசன் மீண்டும் பலம் உடையவராக எழுந்து தீபிகாவை அழித்து கிருஷ்ணனின் கல்கி அவதாரத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதுடன் கல்கி முதல் பாகம் முடிவுக்கு வந்துள்ளது.


Video Thumbnail

விமர்சனம் ரேட்டிங் - விமர்சனம் & ரேட்டிங்

கல்கி 2898 ஏடி திரைப்படம் விமர்சனம் ரீதியில் இந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரமாண்ட பட்ஜெட் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், வசூல் ரீதியில் சாதனை படைத்தது. இருப்பினும் விமர்சனம் ரீதியில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த படம் ஹிந்துக்களின் மஹாபாரதம் கதையை மையமாக கொண்டு கற்பனை கலந்த ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. ஒருபட்சமாக இந்த படம் ஹிந்துக்களுக்கு ஆதரவாக உள்ளது என பலர் தங்களின் கருத்துகளை சொல்லி இப்படத்திற்கு சமூக வலைத்தளத்தில் கலவையான விமர்சனத்தை பெற்று தந்துள்ளனர். இருப்பினும் இப்படம் படப்பிடிப்பு மேக்கிங் மற்றும் திரைக்கதை வடிவமைப்பு என பல விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு (4/5) ரேட்டிங் அளிக்கப்பட்டுள்ளது.


Video Thumbnail

வசூல் பிளாக்பஸ்டர் - வசூல் பிளாக்பஸ்டர்

கல்கி 2898 ஏடி திரைப்படம் வசூல் ரீதியில் இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 600 கோடிகள் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், விநியோகம் மற்றும் மற்ற விற்பனை என தயாரிப்பு நிறுவனத்திற்கு வசூலில் லாபத்தை பெற்று தந்துள்ளது. இப்படம் இந்திய முழுவதும் பல திரையரங்கில் வெளியாகி முதல் நாளில் 200 கோடிகளை நெருங்கி, பின் அடுத்தடுத்த நாட்களில் வசூல் மழை பொழிந்துள்ளது. கல்கி 2898 ஏடி திரைப்படம் உலகளவில் இதுவரை மொத்தம் 1200 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் இரண்டாம் பாக திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Video Thumbnail

கல்கி 2898 ஏடி ஓடிடி வெளியீடு - கல்கி 2898 ஏடி - ஓடிடி வெளியீடு

2024 ஜூன் மாதம் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம், 1000 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. கல்கி 2898 ஏடி திரைப்படம் 2024 ஆகஸ்ட் 22ல் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி என இரண்டு தளத்தில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது.


கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இப்படம் 'அமேசான் பிரைம் ஓடிடி' தளத்தில் 2024 ஆகஸ்ட் 22ல் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. அதே சமயம் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் மட்டும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


கல்கி 2898 ஏடி திரைப்படம் ஓடிடியில் வெளியான நொடியில் இருந்து பல ரசிகர்கள் இந்த படத்தினை கண்டு ரசித்து வருகின்றனர். திரையரங்கு வசூலை தொடர்ந்து விரைவில் கல்கி 2898 ஏடி திரைப்படம் ஓடிடி தளத்தில் பெரிய அளவில் சாதனை படைக்க உள்ளது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+