X
முகப்பு சினி தரவரிசை

Maharaja OTT: நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் சாதனை! பலரின் பாராட்டை அள்ளிய 'மகாராஜா'

Author Sakthi Harinath | Published: Tuesday, July 23, 2024, 05:08 PM [IST]

Maharaja OTT: நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் சாதனை! பலரின் பாராட்டை அள்ளிய 'மகாராஜா' - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் விஜய் சேதுபதி, அனுராங், சிங்கம் புலி என பல நடிகர்கள் நடித்துள்ள 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பலர் கவனத்தை ஈர்த்து அதிக பார்வையாளரை கடந்து சாதனை படைத்துள்ளது. முழு தகவல்கள் இதோ.


cover image
Video Thumbnail

மகாராஜா - மகாராஜா

மகாராஜா - இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.


குடும்பங்கள் கண்டு மகிழும் அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


நடிகர் விஜய் சேதுபதி திரைவாழ்வில் இவர் நடிக்கும் 50வது படமாகும், மகாராஜா. இப்படத்தினை பேஸ்சன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஜூன் 14ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

Video Thumbnail

மகாராஜா கதை - மகாராஜா - கதை

விஜய் சேதுபதி கே.கே நகர் பகுதியில் ஒரு சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் தனது வீட்டில் இருந்த லட்சுமி-யை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷன்-க்கு புகார் அளிக்க வரும், விஜய் சேதுபதி பல அவமானங்களை சந்தித்து போலிஸிடம் சில லட்சம் லஞ்சம் தருவதாக டீல் செய்து தனது வீட்டில் காணாமல் போன லட்சுமியை கண்டுபிடிக்க சொல்கிறார். விஜய் சேதுபதியின் டீலுக்காக போலீஸ் அதிகாரி நடராஜன் தனது தேடலை தொடங்குகிறார்.


கதைக்களம் நகர பல விஷயங்கள் வெளிவருகிறது. 15 வருடத்திற்கு முன் அனுராக் காஷ்யப் எலக்ட்ரிகல் தொழில் செய்து வருகிறார். பகல் நேரத்தில் எலக்ட்ரிகல், இரவு நேரத்தில் திருட்டு என செய்து வருகிறார் அனுராக் காஷ்யப். தான் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார், அனுராக் காஷ்யப். ஒரு நாள் போலீஸிடம் சிக்கும் அனுராக் காஷ்யப், இதற்கு காரணம் விஜய் சேதுபதி தான், என தவறாக புரிந்து கொள்கிறார். 15 வருடம் ஜெயில் தண்டனைக்கு பிறகு வெளிவரும் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை தேடி கண்டுபிடித்து அவரை பழிவாங்க துடிக்கிறார். 


விஜய் சேதுபதியின் மனைவி திவ்யா பாரதி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்க, அப்போது அவரது மகளை குப்பை தொட்டியில் போட்டு செல்கின்றனர். விஜய் சேதுபதி தன் மகளுடன் அந்த குப்பை தொட்டியையும் எடுத்து வருகிறார். அந்த குப்பை தொட்டியின் பெயர் தான் லட்சுமி. 


ஜெயிலில் இருந்த வெளிவந்த அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். பின்னர் விஜய் சேதுபதி குப்பை தொட்டி காணவில்லை என புகார் அளித்து, போலீஸ் கவனத்தை ஈர்த்து, அனுராக் காஷ்யப் கண்டுபிடிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் ட்விஸ்ட்...

Video Thumbnail

மகாராஜா பிளாக்பஸ்டர் - மகாராஜா - பிளாக்பஸ்டர்

விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான 'மகாராஜா' விமர்சனம் ரீதியாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தினை போன்று விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' என்னும் 25வது படமும் பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.


மகாராஜா திரைப்படம் உலகளவில் '100' கோடிகளை தாண்டி வசூலித்து இந்த ஆண்டின் வெற்றி படங்களின் வரிசையில் இடம்பிடித்து இருக்கிறது. வசூல் மற்றும் விமர்சனம் என இப்படம் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஜொலித்து வருகிறது.

Video Thumbnail

மகாராஜா - மகாராஜா - ஓடிடி

மகாராஜா திரைப்படம் 2024 ஜூலை 12ல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. திரையரங்கில் இப்படம் படைத்துள்ள சாதனைகளுக்கு பிறகு, தற்போது மகாராஜா நெட்ப்ளிக்ஸ் ஓடிடி மூலம் பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. 


Video Thumbnail

அங்கீகாரம் - அங்கீகாரம்

மகாராஜா திரைப்படத்தின் வெற்றி மூலம் பல நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் சிங்கம் புலி, இயக்குனராக அஜித் குமார் நடித்துள்ள 'ரெட்' படத்தினை இயக்கியுள்ளார். தற்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள இவர், மகாராஜா திரைப்படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்து பலரை கவர்ந்துள்ளார்.


சிங்கம் புலி, நட்டி நடராஜன், அருள் தாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ், அனுரங் கஷாப், மணிகண்டன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி ஒரு அங்கீகாரம் பெற்றுள்ளனர். இக்கட்டான சூழலில் தமிழ் சினிமாவை காப்பாற்றிய திரைப்படமாக இப்படம் பிரபலமாகியுள்ளது.


Video Thumbnail

மகாராஜா ஓடிடியில் சாதனை - மகாராஜா - ஓடிடியில் சாதனை

திரையரங்கை தொடர்ந்து 'மகாராஜா' திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆன நிலையில், இப்படம் அதிக பார்வையாளரை தற்போது கடந்துள்ளது. விமர்சன ரீதியாக பேசப்பட்ட இப்படம், மீம்ஸ், கிளிப்ஸ் என இப்படம் தொடர்புடைய செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பலமுறை ட்ரெண்ட் ஆகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது. பெரிய அளவில் பேசப்பட்ட இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளரை கடந்து ஓடிடி தளத்திலும் பிளாக் பஸ்டர் படமாக சாதனை படைத்து ஜொலிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+