twitter
    X
    Home சினி தரவரிசை

    2020ஆம் ஆண்டு ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Published: Thursday, December 3, 2020, 12:03 AM [IST]

    2020ஆம் ஆண்டு தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி/தோல்வி அடைந்தன. அதில் சில திரைப்படங்கள் மக்களின் ஆதரவை பெற்று பிரபலமானது மற்றும் சில திரைப்படங்கள் திரையுலக விமர்சகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இங்கு தமிழில் 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பெரிதும் கேலியும் கிண்டலுமாக விமர்சிக்கப்பட்ட திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image
    சைக்கோ

    சைக்கோ

    1

    பார்வை இழந்த நாயகன், அவர் செய்யும் சாகசங்கள் என இப்படத்தினை பற்றிய விமர்சனம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. பெண்களை ஒரு பொது இடங்களில் வைத்து ஒரு சிசிடிவி காட்சிகளில் கூட மாட்டாமல் எளிதாக கடத்தும் வில்லன் என இப்படத்தினை பற்றிய விமர்சனங்களும், கிண்டல் பேச்சுகள் தமிழ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.

    மாஃபியா அத்தியாயம்-1

    மாஃபியா அத்தியாயம்-1

    2

    மாஃபியா திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக உருவாகி ரசிகர்களை சற்று சலிப்படைய வைத்துள்ளது. மிகவும் குறுகிய நேரங்களில் பல அதிரடி காட்சிகள் உள்ள ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவான இத்திரைப்படம், ஒவ்வொரு காட்சிகளிலும் "ஸ்லொ மோஷன் காட்சிகள்" போன்று இப்படத்தில் இடம் பெற்று திரைப்பட ரசிகர்களை மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் இப்படத்தினை பற்றிய மீம்ஸ் மற்றும் செய்திகள் பரவி இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

    பெண்குயின்

    பெண்குயின்

    3

    தியேட்டர் பணிநிறுத்ததால் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம், மோசமான விமர்சனங்களால் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இப்படம் மிக மோசமான திரைக்கதையில் வெளியாகி திரைப்பட ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்டு தோல்வி அடைந்துள்ளது.

    வர்மா

    வர்மா

    4

    இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான இப்படம், வெளியிட்டு நேரத்தில் படக்குழு சார்பாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வேறொரு இயக்குனரால் மீண்டும் முதலிருந்து இப்படம் "ஆதித்ய வர்மா" என்ற தலைப்பில் வெளியாகி தோல்வி அடைந்துள்ள நிலையில், பாலா இயக்கிய "வர்மா" திரைப்படம், தியேட்டர்களில் இல்லாமல் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகியது. மிகவும் மோசமான வசனங்கள் மற்றும் முகசுளிக்கும் காட்சிகளில் உருவாகி இப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிகம் விமர்சிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுமாக திரைப்பட ரசிகர்களால் பரப்பப்பட்டு பிரபலமாகியுள்ளது.

    புத்தம் புது காலை

    புத்தம் புது காலை

    5

    தமிழ் ஆந்தாலஜி திரைப்படமாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம், கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா, கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து நல்ல விமர்சனங்கள் பெற்றது. ஆனால் இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குனர் சுஹாசினி மற்றும் ராஜிவ் மேனன் பாகங்கள் மிகவும் மோசமான விமர்சனங்கள் பெற்று இப்படத்தின் சுவாரஸ்யத்தை பாதித்துள்ளது. திரைப்பட ரசிகர்களால் சுஹாசினி மற்றும் ராஜிவ் மேனன் திரைப்பட பாகங்கள் மிகவும் கிண்டல் செய்யப்பட்டு பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2

    இரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2

    6

    நீண்ட இடைவேளைக்கு பின்னர் தியேட்டர்களில் வெளியான இத்திரைப்படம், திரைப்பட ரசிகர்களை முகசுளிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் வசனங்களில் உருவாகி விமர்சனத்திற்கு உள்ளானது. ஒரு ஆபாச திரைப்படமாக இப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் காட்சிகள் மற்றும் இப்படத்தினை பற்றிய விமர்சனங்கள் என அதிகம் பரப்பப்பட்டு இத்திரைப்படம், மிகவும் கேலியும் கிண்டலுமாக பிரபலமானது. 

    பிஸ்கோத்

    பிஸ்கோத்

    7

    நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம். நகைச்சுவையாக இப்படம் ரசிகர்களை கவர்ந்தாலும், திரைக்கதை மற்றும் கதைக்கரு என எதுவும் இப்படத்திற்கு பலமாக அமையவில்லை. இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், இப்படத்தினை பற்றிய கருத்துகள் மிக தோல்வியாக அமைந்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X